அடுத்த வாரம் புதிய பிஎம்டபிள்யூவின் ரோட்ஸ்டெர் மாடல் அறிமுகம்!

By Saravana

அடுத்த வாரம் பிஎம்டபிள்யூவின் புதிய இசட்4 ரோட்ஸ்டெர் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. புனேயில் நடைபெறும் விழாவில் இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோற்றத்தில் பல்வேறு மாறுதல்களுடன் புதிய இசட்4 ரோட்ஸ்டெர் வர இருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், மாறுதல் செய்யப்பட்ட பம்பர், புதிய கிரில் ஆகியவை கூடுதல் மதிப்பையும், அழகையும் தருகிறது.

BMW Z4 Roadster

இன்டிரியரில் அதிக மாற்றங்கள் இல்லை. மடக்கி வைக்கும் வசதி கொண்ட சென்ட்ரல் டிஸ்ப்ளே, ஐ டிரைவ் சிஸ்டம் ஆகியவை குறிப்பிட்டு கூறலாம். கான்சாஸ் லெதர் ட்ரிம், ஆந்த்ராசைட் வுட் ஃபினிஷ் ஆகியவையும் சிறப்பு சேர்க்கின்றன.

154 பிஎச்பி பவரை அளிக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட மாடல் எஸ்டிரைவ் 18ஐ என்ற மாடலில் பேஸ் வேரியண்ட்டாக வந்துள்ளது.

ஆனால், இந்தியாவில் 301 பிஎச்பி ஆற்றலையும், 400 என்எம் டார்க்கையும் அளிக்கும் 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட எஸ் டிரைவ்35ஐ என்ற ஒரே வேரியண்ட்டில் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளது. இசட் எஃப் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும்.

ரூ.70 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படும் இந்த புதிய கார் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது.

Most Read Articles
Story first published: Saturday, November 9, 2013, 10:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X