யூஸ்டு கார் வாங்கும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்

பயன்படுத்தப்பட்ட கார் வாங்கும்போது எச்சரிக்கையாக இருப்பது அவசியம். ஏனெனில், பளபளப்பாக தெரியும் காரில் பல பிரச்னைகள் உள்ளுக்குள் மறைந்திருக்கும். எனவே, நன்கு அனுபவப்பட்ட மெக்கானிக் அல்லது நண்பரை அழைத்து செல்வது அவசியம்.

ஒரு வேளை நண்பர்கள், மெக்கானிக்குகள் கிடைக்கவில்லை. ஒன்றும் பெரிய விஷயமாக கருதி திட்டத்தை ஒத்திப் போடாமல், யூஸ்டு கார் வாங்கும்போது சில முக்கிய விஷயங்களை கவனித்தால் போதும். யூஸ்டு கார் குறைகளை நீங்களே எளிதில் கண்டுபிடித்து விடலாம். அதற்காக, சில முக்கிய விஷயங்கள் ஸ்லைடரில் கொடுக்கப்பட்டுள்ளன.

விபத்தில் சிக்கிய காரா?

விபத்தில் சிக்கிய காரா?

விபத்தில் சிக்கிய காரா என்பதை கண்டுபிடிக்க டிக்கி உள்புறம் அல்லது இணைப்பு உள்ள பகுதிகளில் வர்ண பூச்சை பார்க்கவும். அதில், பெயர்ந்து விழந்தது போன்றோ அல்லது தெறிப்பு இருந்தாலோ அந்த கார் விபத்தில் சிக்கிய காராக இருக்கலாம்.

 டயர்

டயர்

டயர்கள் அதிக தேய்மானம் கண்டுள்ளதா, அல்லது புதிதாக மாற்றப்பட்டுள்ளதா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். இதைவைத்தும் காரின் விலையை குறைக்க முடியும்.

புகை

புகை

காரை ஸ்டார்ட் செய்யும்போது புகைபோக்கியிலிருந்து நீல நிறத்தில் அடர்த்தியான புகை வந்தால் எஞ்சினில் பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். அதிக கரும்புகை வந்தால் அதிக எரிபொருளை எஞ்சின் விழுங்குகிறது என்பது பொருள். மைலேஜ் தராது என்று கண்டுபிடித்துவிடலாம்.

ஏசி

ஏசி

ஏசியை ஆன் செய்துவிட்டு கொஞ்சம் மேடான பகுதியில் காரை செலுத்தவும். அப்போது ஏசி குளிர்ச்சியை தருவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொண்டால் அதில் பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். இன்டிரியரும் சுத்தமாக பராமரிக்கப்பட்டிருக்கிறதா என்பதையும் பார்த்துக் கொள்ளவும்.

எஞ்சின் ஆயில் தொட்டி

எஞ்சின் ஆயில் தொட்டி

எஞ்சின் ஆயில் மூடியை திறந்துவிட்டு தொட்டியின் உள்ளே பார்க்கவும். சுற்றிலும் கருப்பு நிற மசை படிந்துள்ளதா என்பதை பார்த்துவிடவும். அது எஞ்சினிலும் அதுபோன்று படிந்து பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது.

பேட்டரி

பேட்டரி

பேட்டரியில் ஆசிட் கசிவு, கீறல், வீறல்கள் இல்லாமல் ஒழுங்காக பராமரிக்கப்பட்டுள்ளதா என்பதை பார்க்கவும், இதை வைத்தே கார் ஒழுங்காக பராமரிக்கப்பட்டுள்ளதா என்பதை அனுமானிக்க முடியும்.

எஞ்சின்

எஞ்சின்

காரை ஸ்டார்ட் செய்தவுடனும், சிறிது தூரம் டெஸ்ட் டிரைவ் செய்யும்போதும் கூடுதல் சப்தம் ஏதாவது வருகிறதா என்பதை உற்று கவனிக்கவும். குறிப்பாக, கியர் மாற்றும்போது கூடுதல் சப்தம் வந்தால் பிரச்னை இருக்கிறது என்பதை யூகித்து விடலாம்.

 பிரேக்

பிரேக்

30-50 கிமீ வேகத்தில் பிரேக்கை பிடிக்கவும். கார் நேராக நிற்கிறதா அல்லது வாலை திருப்புகிறதா என்று பாருங்கள். இதேபோன்று, சரிவு பாதையில் நிறுத்தி ஹேண்ட்பிரேக்கும் சரியாக பிடிக்கிறதா என்பதை சோதித்துக் கொள்ளவும்.

ஸ்டீயரிங்

ஸ்டீயரிங்

ஸ்டீயரிங் ஓட்டும்போது அதிர்வுகள் அதிகம் தெரிந்தால், ப்ரண்ட் என்ட்-ல் கோளாறு இருக்கிறது என்று அர்த்தம்.

எலக்ட்ரிக்கல்

எலக்ட்ரிக்கல்

காரில் ஒயரிங் சரியாக இருக்கிறதா என்பதையும், ஹெட்லைட், இன்டிகேட்டர் லைட்டுகள், வைப்பர் ஆகியவை முறையாக இயங்குகிறதா என்பதையும் பார்த்துக்கொள்ளவும். இதேபோன்று, பவர் விண்டோ சரியாக வேலை செய்கிறதா என்பதையும் கவனிக்கவும்.

ஓடோமீட்டர் ரீடிங்

ஓடோமீட்டர் ரீடிங்

3 முதல் 5 ஆண்டுகள் ஓடிய கார் 20,000 கிமீ முதல் 35,000 கிமீ.,க்குள் ஓடியிருந்தால் ஓரளவு உங்களுக்கு நல்ல டீலாக அமையும். யூஸ்டு கார் வாங்கிய அனுபவம் குறித்து உங்கள் வசம் ஐடியா இருந்தாலும் கருத்துப் பெட்டியில் எழுதவும். பிறருக்கு பயன்படும்.

இறுதியாக ஒரு சோதனை

இறுதியாக ஒரு சோதனை

காரை சுத்தமான ஒரு இடத்தில் 30 நிமிடங்கள் நிறுத்தி வையுங்கள். பின்னர் காரை நகர்த்திவிட்டு அந்த இடத்தில் ஆயில் கசிவு ஏற்பட்டுள்ளதா என்பதை சோதித்து பார்த்துக் கொள்ளுங்கள்.

 ஆவணங்கள் சரிபார்த்தல்

ஆவணங்கள் சரிபார்த்தல்

காரின் ஆவணங்களில் இருக்கும் எஞ்சின் நம்பர், சேஸி நம்பரும், காரில் பொறிக்கப்பட்டிருக்கும் நம்பர்களும் ஒன்றாக இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளவும். மேலும், கார் கடனில் வாங்கப்பட்டிருந்தால், NOC- சான்றை காண்பிக்க சொல்லவும். இதேபோன்று, காருக்கு இன்ஸ்யூரன்ஸ் எந்த தேதி வரை இருக்கிறது அல்லது காலாவதியாகிவிட்டதா என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X