ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி... விரைவில் கார் விலை உயர்கிறது!

Car Prrce Hike
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் லாபத்தில் பெரும் சரிவு ஏற்படுவதை தடுத்து நிறுத்தும் விதமாக, கார் விலையை உயர்த்துவதற்கு பெரும்பாலான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

டாலருடன் போட்டி போட முடியாமல் இந்திய ரூபாய் திணறி வருகிறது. ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவு வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.51.73 ஆக இருந்தது. ஆனால், தற்போது ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.59.70 ஆக இருக்கிறது.

உதிரிபாக இறக்குமதி

ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டிருப்பதால், உதிரிபாகங்களை அதிகம் இறக்குமதி செய்யும் கார் நிறுவனங்களே பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. ரூபாய் மதிப்பு சரிவால் இறக்குமதி செய்யப்படும் உதிரிபாகங்களுக்கு கூடுதல் விலை கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு கார் நிறுவனங்கள் தள்ளப்ட்டு இருக்கின்றன.

இதன் எதிரொலியால், கார் நிறுவனங்களின் நிகர லாபத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்த்துக் கொள்ளும் விதமாக கார் விலையை விரைவில் உயர்த்துவதற்கு பெரும்பாலான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

எரிபொருள் விலையும் உயரும்

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் கார் விலை உயர்வோடு நின்று விடப்போவதில்லை. தவிரவும், பெட்ரோல், டீசல் விலையும் விரைவில் உயர்த்தப்படும் அபாயம் இருக்கிறது. அதாவது, மாதத் தவணை தவிர கூடுதலாக ஒரு விலை உயர்வு அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், கார் விற்பனையில் மேலும் பாதிப்பு ஏற்படும் என கார் நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. இதுதவிர, எரிபொருள் விலை உயர்வால் தற்போது நிலவும் பணவீக்கம் இன்னும் வீங்கி பெரிதாகி விலைவாசியும் கடுமையாக உயரும். இதே நிலை நீடித்தால் வரும் பண்டிகை காலம் மிகவும் மோசமாக அமையும் என்றும் ஆட்டோமொபைல் துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

Most Read Articles
English summary
Due to rupee depreciation, automobile companies including Toyota and General Motors, are keeping options open to increase prices of their vehicles.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X