புதிய மினி எம்பிவி காரை களமிறக்கும் செவர்லே

செவர்லே பிராண்டில் புதிய மினி எம்பிவி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் பணிகளில் ஜெனரல் மோட்டார்ஸ் தீவிரமாக இறங்கியுள்ளது.

வரிச்சலுகை பெறும் விதத்தில் ஸைலோவை 4 மீட்டருக்குள் சுருக்கி குவான்ட்டோ என்ற பெயரில் மஹிந்திரா அறிமுகம் செய்தது. இதேபாணியில் தற்போது சமீபத்தில் விற்பனைக்கு வந்த என்ஜாய் எம்பிவி காரை 4 மீட்டருக்குள் சுருக்கி புதிய மாடலை அறிமுகப்படுத்த ஜெனரல் மோட்டார்ஸ் தீவிரமாக களமிறங்கியுள்ளது.

Chevrolet plans to launch compact Enjoy in India

செயில் கார்களில் உயிர்கொடுத்து வரும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுடன் இந்த புதிய காரை அறிமுகம் செய்ய ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

5 பேர் பயணம் செய்யும் வசதியுடன் வரும் இந்த புதிய மினி என்ஜாய் கார் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என செவர்லே கருதுகிறது. மேலும், என்ஜாய் எம்பிவி காரைவிட ரூ.40,000 குறைவான விலையில் இந்த புதிய கார் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
According to the sources, General Motors India is reportedly developing a sub-four-metre version of its recently launched MPV, the Enjoy.
Story first published: Friday, June 7, 2013, 16:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X