செவர்லே தவேரா, செயில் டீசல் கார்களின் உற்பத்தி நிறுத்தம்?

By Saravana
Chevrolet Sail
செவர்லே தவேரா, செயில் ஹேட்ச்பேக் மற்றும் செடான் கார்களின் டீசல் மாடல்களின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆட்டோஎக்ஸ் என்ற இணையதளம் இந்த தகவலை வெளியிட்டு உள்ளது. பாதுகாப்பு காரணங்களை காட்டி மேற்கண்ட கார்களின் உற்பத்தியை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுத்தியுள்ளதாகவும், தவிரவும், விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு டீலர்களுக்கு ஜெனரல் மோட்டார்ஸ் உத்தரவிட்டுள்ளதாகம் கூறப்படுகிறது.

பாரத் ஸ்டேஜ்-3 தவேராவில் புகை வெளியிடும் அளவு பிரச்னையும், செயில் டீசல் மாடல்களின் பாதுகாப்பு சம்பந்தமான பிரச்னையால் இந்த உத்தரவை ஜெனரல் மோட்டார்ஸ் இட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பெங்களூரில் உள்ள செவர்லே டீலரிடம் வினவியபோது, அப்படியேதும் இதுவரை உத்தரவுகள் வரவில்லை என்றும், வழக்கம்போல் சம்பந்தப்பட்ட மாடல்களுக்கு முன்பதிவும், டெலிவிரியும் நடந்து வருவதாக தெரிவித்தனர்.

Most Read Articles
English summary

 General Motors has stopped production and halted sales of Chevrolet Tavera and the Sail models in India due to certain issues that have cropped up. This rumor comes from AutoX, which claims the American automaker has directed dealerships across the country to stop selling these models with immediate effect.
Story first published: Monday, June 10, 2013, 13:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X