சென்னை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையில் இசூஸு எஸ்யூவி உற்பத்தி!!

சென்னை, திருவள்ளூரில் உள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் கார் ஆலையில் இசூஸுவின் புதிய பிரமியம் எஸ்யூவி மற்றும் பிக்கப் டிரக் ஆகியவை உற்பத்தி செய்யப்பட உள்ளன. இதற்காக, ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், இசூஸு இடையே நேற்று ஒப்பந்தம் போடப்பட்டது.

தாய்லாந்தில் உள்ள இசூஸு ஆலையில் இருந்து திருவள்ளூர் ஆலைக்கு உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு எம்யூ-7 மற்றும் டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அசெம்பிள் செய்யப்படும் என இசூஸு தெரிவித்துள்ளது.

Isuzu MU7

திருவள்ளூரிலிருந்து 70 கிமீ தொலைவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீ நகரில் இசூஸுவின் புதிய ஆலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து உற்பத்தி துவங்கும் வரை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையில் கார் மற்றும் பிக்கப் டிரக்குகள் உற்பத்தி செய்யப்பட உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் கோவை மற்றும் ஐதராபாத்தில் இசூஸுவின் எம்யூ-7 எஸ்யூவி மற்றும் டி-மேக்ஸ் பிக்கப் டிரக் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இவை இரண்டிற்கும் நல்ல வரவேற்பு இருப்பதாக இசூஸு தெரிவித்துள்ளது. தற்போது தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்த இரண்டு மாடல்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

Most Read Articles
English summary
Japanese automobile manufacturer Isuzu entered into an agreement with Hindustan Motors on Friday for contract manufacturing of Isuzu sports utility vehicles (SUVs) and pickup trucks in India. 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X