அக்டோபரில் ஹோண்டா அமேஸ் விற்பனை அமோகம்: மாத விற்பனை 10000ஐ நெருங்கியது

By Saravana

இந்த பண்டிகை காலம் ஹோண்டாவுக்கு அமேஸ் புண்ணியத்தில் அமோகமாக இருந்து வருகிறது. கடந்த மாதம் அமேஸ் விற்பனை 10,000ஐ நெருங்கியுள்ளது.

ஆம், கடந்த மாதம் 9,564 அமேஸ் கார்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளது. இதுதான், அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து அமேஸ் காரின் அதிகபட்ச மாத விற்பனையாக பதிவாகியுள்ளது.

Honda Amaze

மேலும், ஹோண்டாவின் விற்பனையும் தொடர்ந்து அமோகமாக இருந்து வருகிறது. அமேஸ் உள்பட மொத்தமாக 11,214 கார்களை விற்பனை செய்து 39 சதவீத வளர்ச்சியை ஹோண்டா பதிவு செய்தது.

ஏப்ரலில் அமேஸ் வந்தது முதல் ஹோண்டாவுக்கு தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக, ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் 70,831 கார்களை விற்பனை செய்து 63 சதவீத விற்பனை வளர்ச்சியை ஹோண்டா பெற்றிருக்கிறது.

இதுகுறித்து ஹோண்டாவின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவு தலைவர் ஞானேஸ்வர் ஸென் கூறுகையில்," ஹோண்டாவின் அதிகம் விற்பனையாகும் மாடல் என்ற பெருமையை அமேஸ் பெற்றுள்ளது. இதற்கு காரணமாகிய வாடிக்கையாளர்களுக்கு இந்த தீபாவளி பண்டிகையின்போது நன்றியை உரித்தாக்குகிறோம்.

கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஆலையில் இந்த மாதம் முதல் 3வது ஷிப்ட்டில் கார் உற்பத்தியை துவங்க உள்ளோம். இதனால், அமேஸ் காத்திருப்பு காலம் வெகுவாக குறையும் என்றார்.

Most Read Articles
English summary
Honda Cars India Ltd continues to flourish thanks to its compact sedan Amaze which continues to attract new customers. As expected, sales during the ongoing festive season has proved to be profitable for the automaker.
Story first published: Saturday, November 2, 2013, 14:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X