முந்துங்கள்... புதிய ஹோண்டா சிட்டி 'டீசல்' காருக்கு முன்பதிவு துவக்கம்!

By Saravana

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி டீசல் கார் வருகை உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஹோண்டா டீலர்களில் சிட்டி டீசல் காருக்கான முன்பதிவு துவங்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது சிட்டி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முற்றிலும் புதிய டிசைனில் வரும் சிட்டி கார் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிட்டி விற்பனை

சிட்டி விற்பனை

கடந்த செப்டம்பர் மாதம் 2,043 சிட்டி கார்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த மாதம் வெறும் 31 சிட்டி செடான் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. புதிய சிட்டி வருகைக்காக டீலர்களில் தற்போதைய மாடலின் விற்பனையை நிறுத்தியது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. ஸ்டாக் இருந்த சிட்டி கார்களும் பெரும்பான்மையான டீலர்களில் கடந்த மாதமே விற்பனை செய்யப்பட்டு விட்டதாகவும் ஹோண்டா வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

 சிட்டி டீசல்

சிட்டி டீசல்

இதுவரை பெட்ரோல் மாடலில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த சிட்டி காரில் முதன்முறையாக டீசல் எஞ்சினுடன் வர இருக்கிறது. இதுவும் எதிர்பார்ப்புக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

டீசல் எஞ்சின்

டீசல் எஞ்சின்

அமேஸ் காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் புதிய கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆனால், கூடுதல் பவர் கொண்டதாக இந்த எஞ்சின் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கும்.

ஜாஸ் அடிப்படை

ஜாஸ் அடிப்படை

சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட கிரைடர் செடான் காரின் டிசைன் தாத்பரியங்களை எடுத்துக் கொண்டு புதிய ஜாஸ் கார் அடிப்படையில் புதிய சிட்டி காரை ஹோண்டா வடிவமைத்துள்ளது. கிளியர் லென்ஸ் ஹெட்லைட்டுடன், புரொஜெக்டர் விளக்குகள் மற்றும் எல்இடி டெயில் லைட்டுகள் புதிய சிட்டி காரின் அழகை வெகுவாக கூட்டும் அம்சங்களாக இருக்கும். மேலும், பக்கவாட்டில் அழுத்தமான பாடி லைன்கள் புதிய சிட்டிக்கு ஸ்போர்ட்டியான தோற்றத்தை கொடுக்கிறது.

முன்பதிவு

முன்பதிவு

நாட்டின் பெரும்பாலான டீலர்களில் சிட்டி டீசல் மாடலுக்கு ரூ.50,000 பெற்றுக்கொண்டு முன்பதிவு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 அறிமுகம்

அறிமுகம்

வரும் 25ந் தேதி புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 டெலிவிரி

டெலிவிரி

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் முறைப்படி புதிய சிட்டி காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தவும், அப்போதே டெலிவிரி துவங்கவும் ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
Story first published: Wednesday, November 6, 2013, 14:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X