அடுத்த ஆண்டு மார்ச்சில் மொபிலியோ உற்பத்தி துவங்கும்: ஹோண்டா தகவல்

By Saravana

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் ஹோண்டா மொபிலியோ உற்பத்தி துவங்கப்பட உள்ளது. இந்தோனேஷியாவில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ள ஹோண்டா மொபிலியோ எம்பிவி காருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து, இந்திய மார்க்கெட்டிலும் ஹோண்டா மொபிலியோ வருகிறது. மாருதி எர்டிகாவுக்கு நெருக்கடியை தருவதற்கு ஆயத்தமாகி வரும் ஹோண்டா மொபிலியோவை வாங்குவதற்கு வாடிக்கையாளர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

உற்பத்தி

உற்பத்தி

மார்ச் மாதம் முதல் மொபிலியோ உற்பத்தி துவங்கப்படும் என்று ஹோண்டா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், உடனடியாக டெலிவிரி கொடுக்கும் பணிகளும் துவங்கும்.

 புதிய ஆலை

புதிய ஆலை

ராஜஸ்தான் மாநிலம், தபுகெரா ஆலையில் புதிய மொபிலியோ காரை உற்பத்தி செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளது. ஆனால், தபுகெரா ஆலையில் எந்தெந்த காரை உற்பத்தி செய்வது என்று இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

டீசல் மாடல்

டீசல் மாடல்

7 சீட்டர் எம்பிவி காரான மொபிலியோவில் அமேஸ் காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு வர இருப்பது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

 இன்டிரியர்

இன்டிரியர்

அமேஸ் காரின் பெரும்பான்மையான இன்டிரியர் அமைப்புகள் மற்றும் ஆக்சஸெரீஸ்களை மொபிலியோவும் பெற்றிருக்கும். இதன்மூலம், எர்டிகாவுக்கு சரியான விலையில் மொபிலியோவை நிலைநிறுத்த முடியும் என்று ஹோண்டா நம்பிக்கையுடன் உள்ளது.

விற்பனை

விற்பனை

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய மொபிலியோ எம்பிவி கார் ஏப்ரல் மாத துவக்கத்தில் முறைப்படி வாடிக்கையாளர் கைகளுக்கு கிடைக்கும் என்று ஹோண்டா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் இந்த காரின் டீசல் மாடல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Honda will start production of Mobilio MPV in India at its Tapukara, Rajasthan, facility starting from March, reports Financial Express, citing their sources. Deliveries will reportedly commence soon after, possibly in the months of April or May.
Story first published: Thursday, November 28, 2013, 17:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X