அசத்தலான ஹோண்டாவின் புதிய ரேஸ் கார்: போட்டியாளர்களுக்கு பொறாமை

ஜப்பானிய கார் நிறுவனமான ஹோண்டா அசத்தலான டிசைன் கொண்ட புதிய கான்செப்ட் ரேஸ் காரை அறிமுகம் செய்துள்ளது. வட அமெரிக்க சந்தையில் அக்குரா என்எஸ்எக்ஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வந்த காருக்கு மாற்று என்எஸ்எக்ஸ் ஜிடி என்ற பெயரில் இந்த கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அக்குரா என்எஸ்எக்ஸ் ஜிடி காருக்கு மாற்றாக 2015ம் ஆண்டில் இந்த கார் உற்பத்தி நிலையை எட்ட இருக்கும் இந்த காரைப் பற்றிய கூடுதல் தகவல்கள், படங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஹைபிரிட் கார்

ஹைபிரிட் கார்

இந்த ரேஸ் ஹோண்டாவின் ரேஸிங் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் வர இருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 500 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தம் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்களும் துணைபுரியும்.

டிசைன்

டிசைன்

இந்த கார் அடுத்த ஆண்டுக்கான ஜப்பான் சூப்பர் சீரிஸ் மோட்டார் பந்தயத்தில் இந்த கார் பங்கேற்க உள்ளது. இதற்காக, ஜப்பானின் ஜிடி500 மோட்டார் பந்தயத்தின் விதிமுறைகளுக்கு இணங்க டிசைன் செய்யப்பட்டுள்ளது.

முதலில்...

முதலில்...

அடுத்த ஆண்டு ஜப்பானின் சூப்பர் சீரிஸ் மோட்டார் பந்தயத்தில் பங்கேற்பதற்கு முன்னதாகவே இப்போது நடைபெறும் சுஸுகா ரேஸ் சர்க்யூட்டில் இந்த கார் களமிறங்குகிறது.

ரேஸ் கிட்

ரேஸ் கிட்

கார்பன் ஃபைபர் ஸ்பாய்லர் லிப், பெரிய அளவிலான விங், மல்டி ஸ்போக் அலாய் வீல்கள், ரேஸ் பாடி கிட் ஆகியவற்றுடன் படு செக்ஸியான ரேஸ் காராக இருக்கிறது.

உற்பத்தி

உற்பத்தி

இந்த ரேஸ் காரின் சாலையில் செல்லத்தக்க மாடல் 2015ம் ஆண்டில் அமெரிக்காவின் ஓஹியோ ஆலையில் உற்பத்தி துவங்கப்பட உள்ளது. அங்கு அக்குரா என்எஸ்எக்ஸ் ஜிடி என்ற பெயரில் விற்பனை செய்யப்படும்.

Most Read Articles
English summary
Honda has surprised everyone by revealing the NSX Concept -GT. A racer which is based on a car that has not yet reached production stage. We are talking about the Acura NSX Concept of course.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X