லண்டனில் களமிறங்கும் ஹூண்டாய் ஹைட்ரஜன் கார்கள்!

லண்டன் மாநகரில் ஹைட்ரஜனில் இயங்கும் கார்களை அதிக அளவில் வர்த்தக மற்றும் பொது போக்குவரத்தில் ஈடுபடுத்த இங்கிலாந்து அரசு தீர்மானித்துள்ளது. அதற்காக, ஒரு சிறப்புத் திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது. அரசாங்க நிதி அளிப்பில் செயல்படுத்தப்பட இருக்கும் இத்திட்டத்திற்காக ஹைட்ரஜனில் இயங்கும் 5 ஐ35 கார்களை ஹூண்டாய் களமிறக்குகிறது.

முன்பு ஹோண்டா, டொயோட்டா உள்ளிட்ட பல நிறுவனங்கள் கான்செப்ட் காரை வடிவமைத்து காட்டியிருந்தாலும், சாதாரண கார்களை போன்றே இந்த காரை உற்பத்தி செய்யும் முதல் நிறுவனமாக ஹூண்டாய் பெருமை பெற்றுள்ளது. லண்டனில் ஹைட்ரஜன் எரிபொருள் நிலையங்களையம் அதிக அளவில் திறப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எரிபொருள் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, ஹைட்ரஜனில் இயங்கும் கார்களின் பயன்பாட்டையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 உற்பத்தி

உற்பத்தி

பெட்ரோல் ஐ35 கார்கள் உற்பத்தி செய்யப்படும் அதே உற்பத்தி பிரிவில் இந்த கார்களும் உற்பத்தி செய்யப்பட உள்ளன. ஹைட்ரஜன் கார்களுக்கான தேவை அதிகரிக்கும்போது தனி உற்பத்திப் பிரிவை துவங்க ஹூண்டாய் முடிவு செய்துள்ளது.

டாக்சி

டாக்சி

இந்த முன்னோடி திட்டத்திற்காக முதலில் 5 கார்கள் ஈடுபடுத்தப்பட உள்ள நிலையில், வரும் 2015ம் ஆண்டுக்குள் 1,000 கார்கள் வரை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஹைட்ரஜன் கார்களை விருப்பமுள்ள வாடகை கார் நிறுவனங்களுக்கு லீசுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

ஒரு முறை ஹைட்ரஜன் ஃபியூல் செல்லில் 650 கிமீ வரை செல்லும். மேலும், கழிவுப் பொருளாக நீராவி மட்டும் வெளியாகும். மணிக்கு அதிகபட்சம் 160 கிமீ வேகத்தில் செல்லும். 0-100 கிமீ வேகத்தை 12.5 நொடிகளில் தாண்டும். நகர்ப்புற பயன்பாட்டுக்கு மிகச் சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஹைட்ரஜன் நிலையங்கள்

ஹைட்ரஜன் நிலையங்கள்

எலக்ட்ரிக் கார்கள் போன்றே, ஹைட்ரஜன் கார்களுக்கான எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் கட்டமைப்பு வசதிகள் இல்லை. இங்கிலாந்தில் தற்போது ஒரே ஒரு ஹைட்ரஜன் எரிபொருள் நிலையம் மட்டுமே உள்ளது. அதேவேளை, அரசாங்கத்தின் புதிய திட்டத்தின் மூலம் 2015ம் ஆண்டுக்குள் 300 ஹைட்ரஜன் ஃப்யூல் செல் நிலையங்களையும், 2025ம் ஆண்டில் 1,000 நிலையங்களையும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பும் நேரம்

எரிபொருள் நிரப்பும் நேரம்

எலக்ட்ரிக் கார்களை சார்ஜ் செய்வதற்கு பல மணி நேரம் பிடிக்கும் நிலையில், ஹைட்ரஜன் கார்களில் எரிபொருள் நிரப்புவதற்கு சாதாரண கார்களை போன்றே ஒரு முறை எரிபொருள் நிரப்புவதற்கு 3 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹைட்ரஜன் மலிவாக கிடைக்கும் எரிபொருளாக இருப்பதால், எதிர்காலத்தில் இந்த திட்டம் சிறப்பான கட்டத்தை எட்டும் என்று கூறப்படுகிறது.

விலை

விலை

இந்த காரின் விலை குறித்து ஹூண்டாய் தகவல் வெளியிடவில்லை. ஆனால், 70,000 பவுண்ட் அடக்கத்தில் இந்த கார்கள் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதிக அளவில் தயாரிக்கும்போது இந்த காரின் அடக்க விலை சாதாரண கார்களின் விலையுடன் போட்டி போடும் அளவுக்கு குறையும் வாய்ப்பு உள்ளதாக ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

ஹைட்ரஜனை சேமித்து வைப்பதில் இருக்கும் பாதுகாப்பு விஷயங்களில் வெற்றி கண்டுவிட்டால், நிச்சயம் பெட்ரோல், டீசலுக்கு மாற்றான வாகன எரிபொருளாக ஹைட்ரஜன் மாறும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

Most Read Articles
English summary
Hyundai is set to become the world's first manufacturer of series production hydrogen fuel cell powered cars. As part of the London Hydrogen Network Expansion (LNHE) project, five Hyundai ix35 based H2 fuel cell vehicles will be deployed initially. The numbers will gradually be increased.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X