செவர்லே தில்லுமுல்லு... ரீகால் விதிகளை கடுமையாக்கும் மத்திய அரசு

கார்களில் இருக்கும் தயாரிப்பு நிலை குறைபாடுகளை சரிசெய்து தருவதற்கான திரும்ப பெறும் விதிகளை கடுமையாக்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

தயாரிப்பு நிலை குறைபாடுகளை கட்டாயம் சரி செய்து தருவதற்கான விதிமுறைகளை கார் நிறுவனங்கள் பின்பற்றுவதற்கு கடுமையான சட்டங்கள் இல்லை. தாமாகவே முன்வந்து திரும்ப பெறும் அழைப்புகளை கார் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. இதுவும் கடந்த ஆண்டு முதல்தான் நடைமுறையில் இருக்கிறது. இந்த நிலையில், செவர்லே தவேரா கார்களின் எஞ்சின்களில் மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றப்படாதது சமீபத்தில் அம்பலமானது. இதையடுத்து, இதுவரை விற்பனை செய்யப்பட்ட 1.14 லட்சம் தவேரா கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்தது. இது மிகப்பெரிய கார்ப்பரேட் மோசடியாக இது வர்ணிக்கப்படுகிறது.

வாடிக்கையாளர் மட்டுமின்றி, மத்திய மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளையும் இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இதைத்தொடர்ந்து, கார்களில் இருக்கும் தயாரிப்பு நிலை குறைபாடுகளை எளிதாக கண்டறியவும், விதிகளை கடுமையாக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, கார் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய புதிய விதிகளை மத்திய அரசு வகுத்து வருகிறது. இந்த பணியை அராய் அமைப்பு தற்போது மேற்கொண்டுள்ளது.

அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் கார்களில் இருக்கும் தயாரிப்பு நிலை குறைபாடுகளை சரிசெய்து தருவதற்கான திரும்ப பெறுவதற்கான கொள்கைகளில் கடுமையான விதிகளை பின்பற்றி வருகின்றன. இதேபோன்று, சர்வதேச அளவிலான தரத்தில் கார்களை தயாரிக்கும் வகையில் புதிய விதிகளை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது.

ஃபோர்டு ஃபிகோ

ஃபோர்டு ஃபிகோ

1.66 லட்சம் கார்களை இதுவரை ஃபோர்டு தாமாக முன்வந்து திரும்ப பெறுவதாக அறிவித்தது. சஸ்பென்ஷன் பிரச்னையை சரி செய்வதற்காக 1,09,469 ஃபிகோ கார்களையும், 22,453 கிளாசிக் கார்களையும் ஃபோர்டு அழைக்க உள்ளது.

ஃபோர்டு கிளாசிக்

ஃபோர்டு கிளாசிக்

பவர் ஸ்டீயரிங் ஹோஸ் குழாய் பிரச்னையை சரி செய்வதற்காக 30, 681 ஃபிகோ கார்களும், 3,418 கிளாசிக் கார்களும் ஆக மொத்தம் 1.66 லட்சம் கார்கள் திரும்ப அழைக்கப்பட்டன.

டொயோட்டா கேம்ரி

டொயோட்டா கேம்ரி

டொயோட்டா நிறுவனம் 1,904 கேம்ரி கார்களுக்கு ரீகால் அழைப்பு விடுத்தது.

டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ்

டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ்

டொயோட்டா நிறுவனம் 7859 கரொல்லா ஆல்டிஸ் கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்தது.

ஹோண்டா சிபிஆர் 250ஆர்

ஹோண்டா சிபிஆர் 250ஆர்

ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 11,506 சிபிஆர் 250ஆர் பைக்குகளுக்கு ரீகால் விடுத்தது.

நிசான் மைக்ரா

நிசான் மைக்ரா

பிரேக் சிலிண்டரில் இருந்த பிரச்னை காரணமாக நிசான் நிறுவனம் 6,286 மைக்ரா கார்களுக்கு ரீகால் விட்டது. சன்னி கார்களிலும் இதே பிரச்னை இருந்ததற்காக திரும்ப அழைக்கப்பட்டது.

நிசான் சன்னி

நிசான் சன்னி

நிசான் நிறுவனம் 15,902 சன்னி கார்களுக்கு ரீகால் விடுத்தது.

ரெனோ பல்ஸ்

ரெனோ பல்ஸ்

காப்பியடித்தால் இதுதான் நிலை. மைக்ரா, சன்னி கார்கள் ரீகால் விடுக்கப்பட்டதைத்தொடர்ந்து, அதன் ரீபேட்ஜ் மாடல்களான ரெனோ பல்ஸ், ரெனோ ஸ்காலா கார்களும் திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டன. ரெனோ நிறுவனம் 2836 பல்ஸ் கார்களுக்கு ரீகால் விடுத்தது.

ரெனோ ஸ்காலா

ரெனோ ஸ்காலா

ரெனோ நிறுவனம் 4,180 ஸ்காலா கார்களுக்கு ரீகால் விட்டது.

ஹோண்டா சிட்டி

ஹோண்டா சிட்டி

ஹோண்டா கார் நிறுவனம் 42,672 சிட்டி கார்களுக்கு ரீகால் விட்டது.

செவர்லே தவேரா

செவர்லே தவேரா

ரீகால் விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும் என்ற உந்துதலுக்கு காரணமான மிகப்பெரிய வாகன ரீகால் இதுதான். மாசுக்கட்டுப்பாட்டு பிரச்னையுடன் தயாரிக்கப்பட்ட 1.14 லட்சம் தவேரா கார்களுக்கு ஜெனரல் மோட்டார்ஸ் ரீகால் அறிவிப்பை வெளியிட்டது.

நம் நாட்டு கார் மார்க்கெட் தற்போது பக்குவப்பட்ட மார்க்கெட்டாகியுள்ளது. எனவே, தர குறைபாடு, தயாரிப்பு நிலை பிரச்னைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். இது வாடிக்கையாளர்களின் நலனை பாதுகாக்கும்," ஆட்டோமொபைல் நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு முதல் கார் தயாரிப்பாளர்கள் பின்பற்றி வரும் ரீகால் கொள்கையின் அடிப்படையில் திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்ட கார்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

Most Read Articles
English summary
Car manufacturers in India will soon have to follow stricter rules which will be implemented by the Indian government relating to recall of faulty vehicles. This development is the direct result of the General Motors fiasco which saw 1.14 lakh Tavera MPVs being recalled following revelation of fudged engine and emission information provided by the American automaker to Automotive Research Association of India (ARAI) during testing.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X