டோக்கியோவில் ஜாகுவார் எஃப் டைப் கூபே கார் அறிமுகம்

By Saravana

ஜாகுவார் எஃப் டைப் காரின் கூபே மாடல் டோக்கியோ மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு எஃப் டைப் காரின் கன்வெர்ட்டிபிள் மாடல் அறிமுகமானது.

உலகின் அழகான கார் மாடல்களில் ஒன்றாக வர்ணிக்கப்படும் இந்த காரின் ஹார்டு டாப் எனப்படும் நிரந்தர கூரை அமைப்பு கொண்ட மாடல் தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. கன்வெர்ட்டிபிள் மாடலைவிட அதிக பெர்ஃபார்மென்ஸ் கொண்டதாகவும், மிக அழகானதாகவும் வந்துள்ள இந்த கார் குறித்த கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

 மாடல்கள்

மாடல்கள்

கன்வெர்ட்டிபிள் கார் போன்றே இந்த காரும் 3 விதமான வேரியண்ட்டுகளி்ல் கிடைக்கும். வி6 எஞ்சின் கொண்ட 2 மாடல்களும், வி8 எஞ்சின் கொண்ட ஒரு மாடலிலும் வந்துள்ளது.

 பேஸ் மாடல்

பேஸ் மாடல்

பேஸ் மாடலான எஃப் டைப் கூபே காரில் 340 எச்பி ஆற்றலை அளிக்கும் 3.0 லிட்டர் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 0- 96 கிமீ வேகத்தை 5.1 வினாடிகளில் கடக்கும். மணிக்கு 259 கிமீ வேகத்தை டாப் ஸ்பீடாக கொண்டது.

 எஃப் டைப் எஸ் கூபே

எஃப் டைப் எஸ் கூபே

இந்த நடுத்தர வகை மாடலில் 380 எச்பி ஆற்றலை அளிக்கும் 3.0 லிட்டர் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 0 -96 கிமீ வேகத்தை 4.8 வினாடிகளில் இந்த மாடல் கடந்துவிடும். இது அதிகபட்சமாக மணிக்கு 275 கிமீ வேகம் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாப் என்ட் மாடல்

டாப் என்ட் மாடல்

எஃப் டைப் ஆர் என்ற இந்த டாப் வேரியண்ட்டில் 550 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 5.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது கன்வெர்ட்டிபிளை விட 55 எச்பி கூடுதல் பவர் கொண்டது. இந்த கார் 0- 96 கிமீ வேகத்தை 4.0 வினாடிகளிலும், மணிக்கு 300 கிமீ வேகம் வரை எட்டும் திறன் கொண்டது.

டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

இந்த காரில் இசட்எஃப் 8 ஸ்பீடு குயிக் ஷிப்ட் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது.

கூரை

கூரை

அலுமினியம் கூரை அல்லது கண்ணாடி கூரை கொண்ட இரு மாடல்களில் இந்த கார் கிடைக்கும்.

பூட் ரூம்

பூட் ரூம்

கன்வெர்ட்டிபிள் மாடலில் பூட் ரூம் இல்லாத நிலையில், இந்த காரில் பூட் ரூம் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு கோல்ஃப் கிட்டுகளை வைத்துச் செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அடாப்டிவ் ஸ்பாய்லர்

அடாப்டிவ் ஸ்பாய்லர்

பூட் லிட் மேல்புறம் பொருத்தப்பட்டிருக்கும் அடாப்டிவ் ஸ்பாய்லர் பொருத்தப்பட்டுள்ளது. கார் மணிக்கு 112 கிமீ வேகத்தை தாண்டும்போது தானாக இந்த ஸ்பாய்லர் இயங்க ஆரம்பித்துவிடும். இதன்மூலம், காருக்கு கூடுதல் நிலைத்தன்மையுடன் செல்ல உதவும்.

 ஓட்டுதல் தரம்

ஓட்டுதல் தரம்

கன்வெர்ட்டிபிள் மாடலைவிட இந்த கார் 50 பவுண்ட் வரை எடை குறைவானது என்பதுடன், சேஸீ மிகுந்த உறுதியுடன் இருப்பதால் சிறந்த ஓட்டுதல் தரத்தை வழங்கும் என்கிறது ஜாகுவார்.

 விலை

விலை

எஃப் டைப் கூபே 65,000 டாலர் விலையிலும், எஃப் டைப் கூபே எஸ் மாடல் 77,000 டாலர் விலையிலும், எஃப் டைப் ஆர் கூபே மாடல் 99,000 டாலர் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும். கன்வெர்ட்டிபிள் மாடலைவிட வி6 எஞ்சின் கொண்ட இரு மாடல்களும் 4,000 டாலர் குறைவான விலையில் வந்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த கார் பிப்ரவரியில் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
One of the most beautiful car of our times has just got a permanent roof. Its the Jaguar F-Type Coupe that we have all been waiting for ever since the British automaker revealed the F-Type convertible last year. And its looks like everything we had hoped for.
Story first published: Thursday, November 21, 2013, 15:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X