பெங்களூரிலிருந்து திருச்சி, மதுரைக்கு மல்டி ஆக்ஸில் பஸ் சேவை: கேஎஸ்ஆர்டிசி துவங்குகிறது

பெங்களூரிலிருந்து திருச்சி, மதுரை நகரங்களுக்கு விரைவில் மல்டி ஆக்ஸில் பஸ் சேவையை கர்நாடக போக்குவரத்து கழகம் துவங்க இருக்கிறது. வரும் 18ந் தேதி முதல் இந்த புதிய பஸ்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரிலிருந்து இரவு 10 மணிக்கு புறப்படும் மல்டி ஆக்ஸில் பஸ் மறுநாள் காலை 6.15 மணிக்கு மதுரையை சென்றடையும். இதேபோன்று, மதுரையிலிருந்து இரவு 9.30 மணிக்கு புறப்படும் பஸ் மறுநாள் காலை 6 மணிக்கு பெங்களூர் வந்து சேரும். இதற்கு கட்டணமாக ரூ.725 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Volvo Multi Axle Bus

இதேபோன்று, பெங்களூரிலிருந்து திருச்சிக்கு மதியம் ஒரு மணிக்கு புறப்படும் பஸ் இரவு 7.45 மணிக்கும், இரவு 10.45 மணிக்கு பெங்களூரில் புறப்படும் பஸ் மறுநாள் காலை 5.15 மணிக்கு திருச்சியை அடையும்.

மறுமார்க்கத்தில் திருச்சியில் காலை 10 மணிக்கும், இரவு 10.45 மணிக்கும் மல்டி ஆக்ஸில் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. காலை திருச்சியில் புறப்படும் பஸ் மாலை 4.45 மணிக்கும், இரவு புறப்படும் பஸ் மறுநாள் காலை 5.30 மணிக்கும் பெங்களூரை வந்தடையும்.

பெங்களூர்-திருச்சி இடையிலான மல்டி ஆக்ஸில் பஸ்சில் ஒருவருக்கு ரூ.650 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்களுக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதாகவும், கூடுதல் தகவல்களுக்கு 080-44554422 என்ற தொலைபேசியில் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என கேஎஸ்ஆர்டிசி வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Volvo multi-axle buses services to Madurai and Trichy to be started June 18 onward.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X