சூப்பர் கார் மார்க்கெட்டில் முடிவுக்கு வந்த லம்போ கல்லார்டோவின் ஆட்சி!!

By Saravana

லம்போர்கினி கல்லார்டோவின் வரலாறு முடிவுக்கு வந்தது. பத்தாண்டுகளாக சூப்பர் கார் மார்க்கெட்டில் பெரும் வெற்றிகரமான மாடலாக லம்போர்கினி பிராண்டில் கல்லார்டோ விளங்கியது.

2003ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கல்லார்டோ கார் முதலில் ஆண்டுக்கு 250 கார்கள் என்ற வீதத்தில் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், லம்போவின் இந்த என்ட்ரி லெவல் காருக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு காரணமாக உற்பத்தி ஆண்டுக்கு 2,000 கார்களாக அதிகரிக்கப்பட்டது.

Lambo Gallardo

இந்த நிலையில், லம்போர்கினி கல்லார்டோ காரின் உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டது. கடைசி லம்போ கல்லார்டோ கார் உற்பத்தி பிரிவிலிருந்து நேற்று முன்தினம் வெளிவந்தது. அந்த காருக்கு பணியாளர்கள் பிரியாவிடை கொடுத்தனர்.

1963ம் ஆண்டு முதல் லம்போர்கினி நிறுவனம் 30,000 கார்களை விற்பனை செய்துள்ளது. இதில் பாதியளவு கல்லார்டோ கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 ஆண்டுகளில் 14,022 லம்போ கல்லார்டோ கார்கள் விற்பனையாகியுள்ளன.

கடைசி லம்போ கல்லார்டோ காரை பெயர் வெளியிட விரும்பாத கார் சேகரிப்பாளர் ஒருவர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லார்டோவுக்கு மாற்றாக கேப்ரிரா என்ற புதிய காரை லம்போர்கினி அறிமுகம் செய்ய இருக்கிறது குறிப்பிடத்தக்கது.+

Most Read Articles
English summary
The era of Lamborghini Gallardo has come to an end. A decade after the reign of the most successful Italian fighting bull began the Sant'Agata Bolognese based supercar maker has stopped production of the Gallardo.
Story first published: Wednesday, November 27, 2013, 11:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X