இது ஜெர்மன் கைவண்ணம்... எப்படியிருக்கிறது டஸ்ட்டர்?

உலகம் முழுவதும் இருக்கும் கார் மாறுதல்களை செய்யும் நிறுவனங்களின் கவனம் தற்போது டஸ்ட்டர் மீது விழுந்துள்ளது. இந்தியாவை சேர்ந்த டிசி நிறுவனம் கூட டஸ்ட்டரை மாறுதல்கள் செய்து சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிலையில், ஜெர்மனியை சேர்ந்த பிரபல எல்இசட்பார்ட்ஸ் என்ற கார் கஸ்டமைசேஷன் நிறுவனம் டஸ்ட்டரை உருமாற்றி அசத்தியிருக்கிறது.

அட்மிரபிள் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கஸ்டமைஸ் டஸ்ட்டரில் எல்இடி ஹெட்லைட்டுகள் அலங்கரிக்கின்றன. முன்புற கிரில்லுக்கு மத்தியில் இரண்டு கூடுதல் லைட்டுகள் பொருத்தப்பட்டிருப்பது முழுமையான ஆஃப் ரோடு வாகனமாக தோற்றமளிக்கிறது. 20 இஞ்ச் மேட் பிளாக் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதனால், டஸ்ட்டரின் உயரம் (கிரவுண்ட் கிளியரன்ஸ் உட்பட) 300 மிமீ அதிகரித்துள்ளது.

கருப்பு, சிவப்பு நிற வெளிப்புறத் தோற்றத்துக்கு அடுத்து இன்டிரியரிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சிவப்பு நிற டேஷ்போர்டு, டச்ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், மஞ்சள் நிற பேக்லிட் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் டஸ்ட்டரின் இன்டிரியருக்கு கூடுதல் கவர்ச்சி தருகிறது.

ரெனோ டஸ்ட்டர்
ரெனோ டஸ்ட்டர்
ரெனோ டஸ்ட்டர்
ரெனோ டஸ்ட்டர்
ரெனோ டஸ்ட்டர்
ரெனோ டஸ்ட்டர்
Most Read Articles
English summary
French car maker Renault's succesfull model Duster is becoming a popular vehicle among tuners. The Renault Duster has become a sensation not only in India but even globally, where the company is selling a large chunk of the Romanian compact SUV. Now German company LZParts has modified the Duster to make it look very dashing, with a slew of modifications.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X