மானியம் வழங்கும் வரை புதிய எலக்ட்ரிக் கார்கள் இல்லை: மஹிந்திரா!

By Saravana

எலக்ட்ரிக் கார்களுக்கு மானியம் வழங்கும் வரை விற்பனைக்கு கொண்டு வருவதை தவிர்க்க மஹிந்திரா முடிவு செய்துள்ளது. எலக்ட்ரிக் கார்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானிய திட்டம் கடந்த ஆண்டு காலாவதியானது. இதனை மத்திய அரசு புதுப்பிக்கவில்லை. இதன் காரணமாக, பல எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் நிறுவனங்கள் காணாமல் போய்விட்டன.

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மஹிந்திரா ரேவா இ2ஓ எலக்ட்ரிக் காரும் விற்பனையில் மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால், பெரும் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே அறிவித்த வெரிட்டோ, மேக்ஸிமோ மற்றும் ஜியோ எலக்ட்ரிக் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருவதை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.

கோயங்கோ கருத்து

கோயங்கோ கருத்து

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியம் திட்டம் அமலுக்கு வராவிட்டால், இ2ஓ., காரை மட்டுமே விற்பனை செய்ய உள்ளோம்," என்று மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் கோயங்கோ தெரிவித்துள்ளார்.

படு பாதாளம்

படு பாதாளம்

கடந்த மார்ச் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு, இதுவரை 400 இ2ஓ., கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இதன் விலை ரூ.8 லட்சத்தை தொடுவதால், வாடிக்கையாளர்கள் இந்த காரின் பக்கம் தலை திருப்ப மறுக்கின்றனர். எனவே, புதிய மாடல்களை தயாரித்து கையை சுட்டுக் கொள்ள மஹந்திரா தயாராக இல்லை.

உற்பத்திக்கு தயார்

உற்பத்திக்கு தயார்

பேட்டரியில் இயங்கும் மஹிந்திரா வெரிட்டோ, மேக்ஸிமோ மற்றும் ஜியோ ஆகிய வாகனங்கள் சோதனைகள் முடிந்து வரும் ஆண்டு துவக்கத்தில் உற்பத்தியை செய்யும் நிலையில் தயாராக இருக்கின்றன. ஆனால், மானியம் வந்தால் மட்டுமே இந்த கார்களை விற்பனைக்கு கொண்டு வரப்படும் நிலை உருவாகியுள்ளது.

அரசனை நம்பி..

அரசனை நம்பி..

சுற்றுச்சூழல் மாசுபடுதலையும், எரிபொருள் தேவேயை குறைக்கும் நோக்கில், ஹைபிரிட், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் அளிக்கும் திட்டத்தை அமல்படுத்தப் போவதாக மத்திய அரசு கூறியது. 2020ம் ஆண்டில் நம் நாட்டில் 7 மில்லியன் ஹைபிரிட், எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்வதற்கு உதவும் வகையில் இந்த மாபெரும் மானிய திட்டத்தை பற்றி அரசு கூறியது. இதை நம்பி மஹிந்திரா இ2ஓ., காரை கொண்டு வந்தது. ஆனால், இதுவரை இந்த மானியத் திட்டம் அமல்படுத்தவில்லை என்பதே இ2ஓ., காரின் விற்பனை இந்தளவு மோசமாக இருப்பதற்கு காரணமாகியுள்ளது.

ஏற்றுமதி

ஏற்றுமதி

இ2ஓ., எலக்ட்ரிக் காரால் ஏற்பட்டு வரும் இழப்பை சரிகட்டுவதற்கு ஏற்றுமதி செய்வதே சிறந்த உபாயமாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே, நேபாள நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பிற நாடுகளுக்கும் ஏற்றுமதியை விரிவுப்படுத்த மஹிந்திரா

Most Read Articles
English summary
Mahindra, the sole manufacturer of Reva e2o electric cars has decided it will not bring out any new electric vehicles till government aid arrives in the form of subsidy.
Story first published: Friday, November 15, 2013, 14:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X