ஸ்டீயரிங்கில் பிரச்னை: 4 கார் மாடல்களை திரும்ப அழைக்கும் மாருதி

ஸ்டீயரிங்கில் இருக்கும் பிரச்னையை சரிசெய்து தருவதற்காக ஸ்விஃப்ட் உள்பட 4 கார் மாடல்களை திரும்ப அழைப்பதாக மாருதி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உற்பத்தி நிறுத்தப்பட்ட ஏ ஸ்டார், ஸ்விஃப்ட், டிசையர் மற்றும் எர்டிகா கார்களை திரும்ப பெறுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

பிரச்னை

பிரச்னை

ஸ்டீயரிங்கில் இருக்கும் சிறிய பிரச்னைக்காகத்தான் இந்த திரும்ப பெறும் அறிவிப்பு என்று மாருதி தெரிவித்துள்ளது. மேலும், ஸ்டீயரிங்கில் பிரச்னைக்குரியதாக கருதப்படும் பாகங்கள் இலவசமாக மாற்றித் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த கார்கள்

மொத்த கார்கள்

4 மாடல்களையும் சேர்த்து மொத்தமாக 1,492 கார்களை திரும்ப பெறுவதாக மாருதி அறிவித்துள்ளது. இதில், 13 ஏ ஸ்டார் கார்கள், 592 ஸ்விஃப்ட் கார்கள்,581 டிசையர் கார்கள் மற்றும் 306 எர்டிகா கார்கள் அடங்கும்.

தயாரிப்பு விபரம்

தயாரிப்பு விபரம்

கடந்த அக்டோபர் மாதம் 19 முதல் 26ந் தேதி வரை தயாரிக்கப்பட்ட 4 கார் மாடல்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும்.

தகவல்

தகவல்

இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு முறைப்படி தகவல் அனுப்பி வைக்கப்படும் என்றும், பிரச்னைக்குரிய பாகங்களை இலவசமாக மாற்றி தரப்படும் என்றும் மாருதி தெரிவித்துள்ளது.

உங்க கார்...?

உங்க கார்...?

உங்களது கார் ரீகால் அறிவிப்பில் இடம் பெற்றுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள இங்கேயுள்ள இணைப்பை செய்து சேஸி நம்பரை கொடுத்து தெரிந்து கொள்ளலாம்.

Most Read Articles
English summary
Maruti Suzuki has said it will recall 4 models from its vehicle lineup. However, the recall seems to be a minor one in terms of numbers. Maruti, which sells millions of vehicles in any given year will recall just 1492 units.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X