லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில் விடைபெறும் பென்ஸ் கார்!

By Saravana

எஸ்எல்எஸ் ஏஎம்ஜி காரை மார்க்கெட்டிலிருந்து விலக்குகிறது மெர்சிடிஸ் பென்ஸ். கடந்த 2010ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி கார் பெர்ஃபார்மென்ஸ் கார்களில் புகழ்பெற்றது.உலக அளவில் தனி ரசிகர் வட்டத்தை பெற்றிருக்கும் இந்த காரின் தயாரிப்பை அடுத்த ஆண்டு நிறைவுக்கு கொண்டு வருகிறது மெர்சிடிஸ் பென்ஸ்.

உலக அளவில் நன்மதிப்பை பெற்று தந்ததற்கும், இந்த காரின் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், விரைவில் துவங்க உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில் சிறப்பு பதிப்பு மாடலை அறிமுகம் செய்ய உள்ளது மெர்சிடிஸ் பென்ஸ். Final Edition என்ற பெயரில் வரும் இந்த சிறப்பு பதிப்பு காரோடு, எஸ்எல்எஸ் ஏஎம்ஜி காரின் வரலாறு முடிவுக்கு வருகிறது. அதேவேளை, எஸ்எல்எஸ் ஏஎம்ஜி கார் விட்டுச் செல்லும் இடத்தை எஸ்எல்சி ஏஎம்ஜி என்ற புதிய கார் மூலம் நிரப்புவதற்கு பென்ஸ் திட்டமிட்டுள்ளது.

சோதனை படங்கள்

சோதனை படங்கள்

எஸ்எல்எஸ் ஏஎம்ஜி காருக்கு பதிலாக வர இருக்கும் எஸ்எல்சி ஏஎம்ஜி கார் தற்போது சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சோதனையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை மெர்சிடிஸ் பென்ஸ் வெளியிட்டுள்ளது. அந்த படங்களை ஸ்லைடரில் வழங்கியுள்ளதோடு, இரு கார்கள் பற்றிய கூடுதல் விபரங்களையும் தொகுத்துள்ளோம்.

பரிமாணம்

பரிமாணம்

எஸ்எல்எஸ் ஏஎம்ஜி காரைவிட மாற்றாக வர இருக்கும் புதிய கார் மாடல் அளவில் சற்று குறைவானதாகவும், விலையிலும் குறைவானதாகவும் இருக்கும்.

புதிய மாடல் அறிமுகம்

புதிய மாடல் அறிமுகம்

எஸ்எல்எஸ் ஏஎம்ஜி காரின் ஃபைனல் எடிசன் கார் அடுத்த ஆண்டு மத்தியில் வரை விற்பனையில் இருக்கும். இதைத்தொடர்ந்து, எஸ்எல்சி ஏஎம்ஜி கார் 2015ல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டும்.

தோற்றம்

தோற்றம்

நீண்ட பானட், பின்புற தோற்றம் மற்றும் டெயில் கிளஸ்ட்டர் ஆகியவை எஸ்எல்எஸ் ஏஎம்ஜி காரின் டிசைன் தாத்பரியங்களை எஸ்எல்சி ஏஎம்ஜி காரும் தாங்கி வருகிறது.

போட்டியாளர்

போட்டியாளர்

போர்ஷே 911 டர்போ காருக்கு நேரடி போட்டியாளராக எஸ்எல்சி ஏஎம்ஜி கார் களமிறக்கப்படுகிறது.

ஃபைனல் எடிசன்

ஃபைனல் எடிசன்

இப்போது எஸ்எல்எஸ் ஏஎம்ஜி ஃபைனல் எடிசன் கார் குறித்த சில தகவல்களை காணலாம். லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில் புதிய எஸ்எல்எஸ் ஏஎம்ஜி ஃபைனல் எடிசன் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

விடைபெறும் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி

முன்புறம், பின்புறம், இன்டிரியர் என பல இடங்களிலும் புதிய ஃபைனல் எடிசன் மாடல் மாற்றங்களை கண்டிருக்கும்.

லிமிடேட் எடிசன்

லிமிடேட் எடிசன்

ஃபைனல் எடிசன் காரை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் விற்பனை செய்ய பென்ஸ் முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு துவக்கம் முதல் மத்தியில் வரை இந்த கார் விற்பனையில் இருக்கும்.

மாடல்கள்

மாடல்கள்

கூபே, ரோட்ஸ்டெர், ஜிடி மற்றும் பிளாக் சீரிஸ் ஆகிய மாடல்களில் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி ஃபைனல் எடிசன் கார் கிடைக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

எஞ்சினில் எவ்வித மாற்றங்களும் இல்லை. தற்போது விற்பனையில் உள்ள 563எச்பி, 583எச்பி மற்றும் 622எச்பி ஆற்றல் எஞ்சின்களுடன் கிடைக்கும்.

Most Read Articles
English summary
If you haven't yet heard, Mercedes Benz has decided to phase out its flagship sports car/grand tourer model, the SLS AMG. That's right, the SLS AMG will soon be no more, after only about 4 years after its introduction (launched in 2010). That's a rather short life cycle for a powerful and well received sports car. 
Story first published: Thursday, November 14, 2013, 12:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X