சென்னையில் மிச்செலினின் புதிய டயர் ஆலை: விரைவில் உற்பத்தி துவங்குகிறது

By Saravana

சென்னையில் மிச்செலின் நிறுவனத்தின் உலகின் மிகப்பெரிய டயர் தயாரிப்பு ஆலையில் விரைவில் திறப்பு விழா காண இருக்கிறது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மிச்செலின் நிறுவனம் டயர் தயாரிப்பில் உலக அளவில் முன்னிலை வகிக்கிறது. பைக், கார், டிரக், விமானம் என அனைத்து ரக வாகனங்களுக்கான டயர் தயாரிப்பிலும் பெயர் பெற்ற நிறுவனமாக விளங்குகிறது.

Michelin Tyres

இந்த நிறுவனம் சென்னை அருகே திருவள்ளூரில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் புதிய டயர் ஆலையை அமைத்துள்ளது.

290 ஏக்கர் பரப்பளவிலான வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய ஆலைதான் உலகின் மிகப்பெரிய டயர் தயாரிப்பு தொழிற்சாலையாக இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் பிராங்கோயிஸ் ரிச்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,"

சென்னையில் அமைக்கப்பட்டிருக்கும் மிச்செலின் டயர் தொழிற்சாலை விரைவில் திறப்பு விழா காண இருக்கிறது. உலகின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலையாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய ஆலை திறப்பு விழா தேதி குறித்து இப்போது தெரிவிக்க இயலாது.

ஆனால், வரும் வாரங்களில் இந்த புதிய ஆலை செயல்பட துவங்கும். 7 ஆண்டுகளில் ரூ.4,000 கோடி முதலீடு செய்யும் திட்டத்துடன் இந்த ஆலை விரிவுப்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய ஆலையின் மூலம் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்," என்றார்.

கடந்த 2009ம் ஆண்டு இந்த புதிய ஆலை அமைப்பதற்காக மிச்செலின் நிறுவனத்துக்கும், தமிழக அரசுக்கும் இடையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. நிலம் கையகப்படுத்துவதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பின் காரணமாக ஆலை திறப்பில் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Story first published: Saturday, September 21, 2013, 10:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X