இனி 4 வீல் டிரைவுடன் மினி கன்ட்ரிமேன்!

மினி பிராண்டு கார் நிறுவனம் தனது All4 என்ற ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தை கூடுதலாக கன்ட்ரிமேன் மற்றும் பேஸ்மேன் ஆகிய இரண்டு மாடல்களில் அறிமுகப்படுத்துகிறது. இதனால், தற்போது 10 மினி கார்கள் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் கிடைக்கும்.

ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட புதிய கன்ட்ரிமேன் மற்றும் பேஸ்மேன் கார்களில் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைந்து பணியாற்றும். மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட மாடலின் எஞ்சின் 122 எச்பி பவரையும், 160 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துவதாக இருக்கும். ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மாடல் 190 என்எம் டார்க்கை வெளிப்படுத்துவதாக இருக்கும்.

உந்துசக்தி திறன்

உந்துசக்தி திறன்

புதிய ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட கன்ட்ரிமேன் கார் 0-100 கிமீ வேகத்தை மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல் 11.9 வினாடிகளிலும், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மாடல் 11.7 வினாடிகளிலும் எட்டும்.

 டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட கன்ட்ரிமேன் காரின் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட மாடல் மணிக்கு அதிகபட்சமாக 184 கிமீ வேகத்தையும், ஆட்டோமேட்டிக் மாடல் மணிக்கு 182 கிமீ வேகத்திலும் எட்டிப் பிடிக்கும்.

 மைலேஜ்

மைலேஜ்

கன்ட்ரிமேன் கார் சராசரியாக லிட்டருக்கு 14.5 கிமீ மைலேஜ் தரும் என மினி தெரிவித்துள்ளது.

முறுக்கு விசை

முறுக்கு விசை

கூப்பர் பேஸ்மேன் காரின் ஆல் வீல் டிரைவ் மாடல் 0-100 கிமீ வேகத்தை மேனுவல் மாடல் 11.8 வினாடிகளிலும், ஆட்டோமேட்டிக் மாடல் 11.6 வினாடிகளிலும் தொட்டுவிடும்.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல் மணிக்கு 185 கிமீ வேகத்திலும், ஆட்டோமேட்டிக் மாடல் மணிக்கு 183 கிமீ வேகத்தையும் எட்டிப் பிடிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.

மைலேஜ்

மைலேஜ்

இந்த காரும் லிட்டருக்கு 14.5 கிமீ மைலேஜ் தரும் என மினி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Mini has extended its ‘All4' all-wheel drive system to two additional models, Cooper Countryman and Cooper Paceman. Mini now offers a total of 10 models with all-wheel drive configuration.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X