மணிக்கு 240 கிமீ., பறக்கும் புதிய எலக்ட்ரிக் சூப்பர் பைக்- விபரங்கள்

அமெரிக்காவை சேர்ந்த மிஷன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் எலக்ட்ரிக் சூப்பர் பைக் தயாரிப்பில் சிறந்த பெயர் பெற்றது. இந்த நிறுவனம் மிஷன் ஆர்எஸ் என்ற பெயரில் சிறப்பு பதிப்பு எலக்ட்ரிக் சூப்பர் பைக் ஒன்றை விற்பனைக்கு கொண்டு வந்து இருக்கிறது. இதுதவிர, மிஷன் ஆர் என்ற பெயரில் சாதாரண மாடலையும் அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய எலக்ட்ரிக் சூப்பர் பைக்கின் வேகம், பெர்ஃபார்மென்ஸ் ஆகிய அனைத்தும், சாதாரண சூப்பர் பைக்குகளுக்கு சற்றும் சளைத்ததல்ல என்பதை காட்டுவதாக இருக்கின்றன. ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்கான அம்சங்கள் கொண்ட இந்த பைக்கை சாதாரண சாலைகளிலும் ஓட்டலாம். இந்த பைக், தனது எலக்ட்ரிக் மோட்டாரில் பராக்கிரமத்தை பரைசாற்றுதோடு, பல புதிய தொழில்நுட்ப வசதிகளையும் வழங்கிறது. அதுபற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பேட்டரி

இந்த சூப்பர் பைக்கில் 17 kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது.

மோட்டார் பவர்

மிஷன் ஆர்எஸ் சூப்பர் பைக்கின் எலக்ட்ரிக் மோட்டார் 160 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

உந்து சக்தி

இந்த சூப்பர் பைக் 0-100 கிமீ வேகத்தை 3 வினாடிகளில் எட்டிவிடும்.

டாப் ஸ்பீடு

சோதனை நிலைகளில் இந்த சூப்பர் பைக் மணிக்கு 241 கிமீ வேகம் வரை எட்டிப் பிடிக்கும். ஆனால், சாதாரண சாலை நிலைகளில் இந்த பைக்கில் 225 கிமீ வேகம் வரை செல்லலாம் என மிஷன் தெரிவித்துள்ளது.

பேட்டரி பேக்கப்

ஒருமுறை சார்ஜ் செய்தால் 320 கிமீ தூரம் வரை செல்ல முடியும் என மிஷன் தெரிவித்துள்ளது.

புதிய வசதி

இதுவரை வந்த மோட்டார்சைக்கிள்களில் இல்லாத புதிய வசதிகளை இந்த பைக் கொண்டுள்ளது. அதாவது, கார்களில் உள்ளது போன்ற டிஸ்ப்ளே யூனிட் ஒன்று பொருத்தப்பட்டு உள்ளது. இந்த டிஸ்ப்ளே யூனிட்டில் 4 ஜி இணைப்பை கொடுத்து கூகுள் மேப் வசதியை பெறலாம். இதுதவிர, ஸ்மார்ட்போன்களையும் புளுடூத் மூலம் இணைக்க முடியும்.

கேமரா

பைக்கின் முன்புறம் உயர்தர துல்லியம் கொண்ட கேமரா ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது.

ரிவர்ஸ் எடுக்கலாம்

இந்த பைக்கில் கார் போன்றே ரிவர்ஸ் எடுக்க முடியும். தள்ள வேண்டிய அவசியம் இருக்காது.

கார்பன் ஃபைபர் வீல்

இந்த பைக்கில் கார்பன் ஃபைபரான் ஆன சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ரேஸ் பேக்குகளில் பொருத்தப்படும் ஓலின்ஸ் சஸ்பென்ஷனுடன் கிடைக்கிறது.

சிறப்பு பதிப்பு

மொத்தம் 40 மிஷன் ஆர்எஸ் எலக்ட்ரிக் சூப்பர் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன.

விலை

ரூ.34 லட்சம் விலையில் இந்த சிறப்பு பதிப்பு மிஷன் ஆர்எஸ் எலக்ட்ரிக் சூப்பர் பைக்குகள் கிடைக்கும்.

Most Read Articles
English summary
Mission Motorcycles, a well known electric sports bike manufacturer, has brought out the race spec Mission RS. An electric superbike that has broken several electric sportbike records. The road homologated version is now available for the the public for a staggering price of $59,999. Only 40 will be made tho
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X