எல்பிஜியில் இயங்கும் ராஸ்காஸி ஹைபிரிட் சூப்பர் கார்!

சிறிய கார்கள் மற்றும் ஆட்டோரிக்ஷா போன்றவை எல்பிஜி அல்லது சிஎன்ஜி வாயுக்களில் ஓடுகின்றன. பெட்ரோல், டீசலை விட இந்த வாயுக்களில் இயங்கும் வாகனங்கள் குறைந்த கார்பனை வெளியிடுவதால், அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், எல்பிஜியில் இயங்கும் சூப்பர் கார் ஒன்றை மோனாகோவை சேர்ந்த மான்டிகார்லோ ஆட்டோமொபைல் நிறுவனம் வடிவமைத்துள்ளது. தனது 30வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் மான்டிகார்லோ நிறுவனம் வடிவமைத்திருக்கும் இந்த புதிய சூப்பர் கார் லிமிடேட் எடிசனாக விற்பனை செய்யப்பட உள்ளது.

மோனோகோ நகரில் இருக்கும் மான்டி கார்லோ ரேஸ் டிராக்கின் ராஸ்காஸி என்ற கொண்டை ஊசி வளைவின் பெயரையே இந்த காருக்கு சூட்டியிருக்கிறது மான்டிகார்லோ.

ஹைபிரிட் நுட்பம்

ஹைபிரிட் நுட்பம்

இந்த கார் பெட்ரோல் மற்றும் ஹைட்ரஜன் செறிவூட்டப்பட்ட எல்பிஜி வாயுவில் இயங்கும்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் பிஎம்டபிள்யூவின் 5.4 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 500 எச்பி சக்தியை வெளிப்படுத்தும்.

தொழில்நுட்ப உதவி

தொழில்நுட்ப உதவி

பிஎம்டபிள்யூவிடமிருந்து பெறப்பட்ட வி12 எஞ்சினை பெட்ரோல் மற்றும் எல்பிஜியில் இயங்கும் விதமாக மாற்றுவதற்கு எல்பிஜி எஞ்சின் தொழில்நுட்பத்தில் பிரசித்தி பெற்ற இத்தாலியை சேர்ந்த பிஆர்சி நிறுவனம் உதவி செய்துள்ளது.

அடுத்து...

அடுத்து...

அடுத்து தயாரிக்கப்படும் ராஸ்காஸி சூப்பர் கார் சூப்பர் சார்ஜர் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட ஹைபிரிட் காராக இருக்கும்.

லிமிடேட் எடிசன்

லிமிடேட் எடிசன்

மொத்தம் 15 ராஸ்காஸி ஹைபிரிட் சூப்பர் கார்களை மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய உள்ளது மான்டி கார்லோ நிறுவனம்.

 விலை

விலை

ரூ.3.91 கோடி விலையில் இந்த புதிய ஹைபிரிட் கார் விற்பனை செய்யப்பட உள்ளது.

Most Read Articles
English summary
Montecarlo Automobile's Rascasse will be extremely exclusive as only 15 units are set to be produced and sold for 500,000 euros (at current exchange rates that translates to INR 3.91 crore.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X