பென்ஸ் ஏ கிளாஸ் நெருக்கடி... வருகிறது குறைந்த விலை ஆடி க்யூ3!

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ், பி கிளாஸ், வால்வோ வி40 கிராஸ் கன்ட்ரி கார்களை தொடர்ந்து பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் ஹேட்ச்பேக் கார் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. ரூ.25 லட்சத்தையொட்டிய விலையில் கிடைக்கும் இந்த கார்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, இந்த விலை பட்டியலில் ஆடி வசம் தற்போது மாடல்கள் இல்லை. இதனால், விற்பனை பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற முன்ஜாக்கிரதையுடன் குறைந்த விலை க்யூ3 எஸ்யூவியை ஆடி அறிமுகம் செய்ய உள்ளது. க்யூ3 ஸ்போர்ட் என்ற பெயரில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய கார் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

விலை

விலை

தற்போது விற்பனை செய்யப்படும் க்யூ3 எஸ்யூவியைவிட ரூ.2 லட்சம் குறைவான விலையில் புதிய க்யூ3 ஸ்போர்ட் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

தற்போது க்யூ எஸ்யூவியில் 170 எச்பி சக்தியையும், 350 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் எஞ்சின் இருக்கிறது. ஆனால், புதிய க்யூ3 ஸ்போர்ட் காரில் 140 எச்பி சக்தியையும், 320 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது.

நோ ஆல் வீல் டிரைவ்

நோ ஆல் வீல் டிரைவ்

புதிய க்யூ3 ஸ்போர்ட் எஸ்யூவியில் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் இருக்காது.

 டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

புதிய க்யூ3 ஸ்போர்ட் காரில் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுக்கு பதிலாக 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது.

 எடை குறையும்

எடை குறையும்

ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் இருக்காது என்பதால் எடை 140 கிலோ குறையும்.

 குறையும் வசதிகள்

குறையும் வசதிகள்

சீட் மெமரி, பகல் நேர ரன்னிங் விளக்குகள், ஸினான் ஹெட்லைட்டுகள், சேட்டிலைட் நேவிகேஷன், சன்ரூஃப், ரிவர்ஸ் கேமரா உள்ளிட்ட வசதிகள் புதிய க்யூ3 ஸ்போர்ட் காரில் இருக்காது.

அறிமுகம்

அறிமுகம்

அடுத்த மாதம் முதல் இந்த புதிய க்யூ3 ஸ்போர்ட் விற்பனைக்கு கொண்டு வர ஆடி திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
With competition in the INR 25 lakhs region of the luxury car market in india becoming fierce Audi is feeling the pinch. Mercedes now offers the A Class and the B Class, that fall into this region, while the Volvo has the V40 Cross Country to offer. BMW will soon come out with the 1 Series hatchback. This leaves Audi India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X