ஹோண்டாவின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி பற்றிய தகவல்கள்

ஹோண்டாவின் புதிய காம்பெக்ட் எஸ்யூவிக்கு சிஆர் - யு என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹோண்டா கார் நிறுவனம். ரூ.10 லட்சத்திற்குள்ளான செக்மென்ட்டில் புதிய எஸ்யூவியை ஹோண்டா அறிமுகம் செய்ய உள்ளது.

கடந்த ஜனவரியில் நடந்த டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் இந்த புதிய எஸ்யூவி கான்செப்ட் நிலையில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடல் இன்னும் இரண்டொரு நாளில் டோக்கியோ மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சிறிய மாற்றங்கள்

சிறிய மாற்றங்கள்

புதிய தலைமுறை ஜாஸ் பிளாட்பார்மில்தான் இந்த எஸ்யூவியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கான்செப்ட் மாடலுக்கும், தயாரிப்பு நிலை மாடலுக்கும் சிறிய வித்தியாசங்கள் இருக்கும். ஹெட்லைட், அலாய் வீல் மற்றும் ரியர் வியூ கண்ணாடிகளின் டிசைன்களில் மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கும்.

வடிவம்

வடிவம்

4 மீட்டருக்கும் அதிகமான நீளத்தை கொண்டிருக்கும். சர்வதேச அளவில் நிசான் ஜூக், பீஜோ 2008, ஃபியட் 500 எக்ஸ் மாடல்களுடனும், இந்தியாவில் ரெனோ டஸ்ட்டர், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 மாடல்களுடன் போட்டி போடும்.

எஞ்சின்

எஞ்சின்

அமேஸ் காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் இந்த எஸ்யூவியிலும் பொருத்தப்பட்டு வரும். இதேபோன்று, பெட்ரோல் மாடலிலும் 1.5 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டதாகவும், முன் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாகவும் இருக்கும்.

 விலை

விலை

சிஆர் வரிசையில் சிஆர் வி, சிஆர் இசட், சிஆர் எக்ஸ் ஆகிய கார் மாடல்களின் வரிசையில் தற்போது சிஆர் யு எஸ்யூவி 4வது மாடலாக களமிறங்குகிறது. ரூ.9 லட்சம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2015ம் ஆண்டில் இந்த எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வரும்.

உற்பத்தி

உற்பத்தி

அடுத்த ஆண்டு இறுதியில் சீனாவில் இந்த எஸ்யூவியின் உற்பத்தி துவங்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, மெக்சிகோ ஹோண்டா ஆலையிலும் தொடர்ந்து, இந்தியாவிலுள்ள தபுகெரா ஹோண்டா ஆலையிலும் இந்த புதிய எஸ்யூவியின் தயாரிப்பு துவங்கும்.

Most Read Articles
English summary
Honda's Urban Compact SUV production version will be completely unveiled at 2013 Tokyo Motors Show. Reports suggest that, it will be named as CR-U. Stay tuned to DriveSpark for more updates.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X