இந்தியாவில் புதிய ஆக்டாவியா சோதனை: முன்னோட்ட தகவல்கள்

ஒரு நேரத்தில் இந்திய வாடிக்கையாளர்களின் மனங்கவர்ந்த எக்ஸிகியூட்டிவ் செடான் காராக ஆக்டாவியா இருந்து வந்தது. போதாத காலம், ஆக்டாவியாவை பெயரை லாரா என மாற்றி விற்பனைக்கு விட்டது ஸ்கோடா. ஆனால், ஆக்டாவியாவின் பெயரை லாரா தக்க வைக்கவில்லை.

விற்பனையிலும் மிகவும் பின்தங்கிவிட்டது. இந்த நிலையில், புதுப்பொலிவுடன் கூடிய ஆக்டாவியா காரை ஸ்கோடா ஆட்டோ விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. மீண்டும் ஆக்டாவியா வர இருப்பதாக வந்த தகவல்கள் வாடிக்கையாளர்கள் மத்தியிலும் நிறைய எதிர்பார்ப்பை கிளறி விட்டிருக்கிறது.

இந்த நிலையில், புதிய ஆக்டாவியா தற்போது புனே சுற்றுவட்டாரப் பகுதிகளில் சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. முக்காடு போடாமல் முழுமையான உற்பத்தி நிலை மாடலாக டெஸ்ட் செய்யப்பட்டு வரும் புதிய ஆக்டாவியா காரின் சோதனை ஓட்டப் படங்களை பவர்டிரிஃப்ட் என்ற ஆட்டோமொபைல் தளம் வெளியிட்டிருக்கிறது. அந்த படங்களையும், புதிய ஆக்டாவியா காரின் முக்கியத் தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

முக்கிய மாடல்

முக்கிய மாடல்

விற்பனையில் மிகவும் மோசமான இடத்தில் இருந்து வரும் ஸ்கோடா ஆட்டோ இந்த ஆண்டு 6 கார் மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது. அதில், மிகவும் முக்கியமான மாடலாக ஆக்டாவியா கருதப்படுகிறது.

தாராள இடவசதி

தாராள இடவசதி

இந்த காரின் ஒட்டுமொத்த நீளத்தில் 90 மிமீ., அகலத்தில் 45 மிமீ., வீல் பேஸில் 108 மிமீ., கூட்டப்பட்டிருக்கிறது. இதுதவிர, பின்புற இருக்கையின் கால் வைக்கும் அறை பகுதி 73 மிமீ., ஹெட்ரூம் 980 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளதால், உட்புறத்தில் தாராள இடவசதி கிடைக்கும்.

 பூட் ரூம்

பூட் ரூம்

இந்த காரில் 590 லிட்டர் பூட் ரூம் கொண்டிருப்பதால் பொருட்கள் வைப்பதற்கான இடவசதியும் தாராளமாகவே இருக்கும்.

எடை குறைப்பு

எடை குறைப்பு

நீள, அகலம் கூட்டப்பட்டிருந்தாலும், இந்த காரின் எடையை 102 கிலோ குறைத்துள்ளனர் ஸ்கோடா எஞ்சினியர்கள்.

எஞ்சின்

எஞ்சின்

பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் பலவித பவர் கொண்ட மாடல்களில் கிடைக்கும்.

பெட்ரோல் மாடல்

பெட்ரோல் மாடல்

1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல் இரண்டு விதமான திறன் கொண்டதாக இருக்கும். 120 பிஎச்பி மற்றும் 138 பிஎச்பி ஆற்றல் கொண்ட மாடல்களில் கிடைக்கும். மற்றொன்று 1.8 லிட்டர் எஞ்சின் கொண்ட மாடல் 177 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்துவதாக இருக்கும்.

 டீசல் மாடல்

டீசல் மாடல்

டீசல் மாடலில் 1.6 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் 103 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்துவதாக இருக்கும். 2.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் 147 பிஎச்பி மற்றும் 181 பிஎச்பி ஆற்றல் கொண்ட வேரியண்ட்களில் கிடைக்கும்.

ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம்

ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம்

அனைத்து வேரியண்ட்களிலும் க்ரீன் டெக் ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம் நிரந்தர அம்சமாக இடம் பெற்றிருக்கும்.

ஆற்றல் சேமிப்பு

ஆற்றல் சேமிப்பு

அனைத்து வேரியண்ட்களும் பிரேக் ஆற்றலை சேமிக்கும் தொழில்நுட்பத்தையும் கொண்டிருக்கும்.

செகண்டரி பிரேக்கிங் சிஸ்டம்

செகண்டரி பிரேக்கிங் சிஸ்டம்

முன்புற மோதல் தடுப்புக்காக டாப் வேரியண்ட்டில் செகண்டரி பிரேக்கிங் சிஸ்டத்துடன் வருகிறது.

 ஏர்பேக்குகள்

ஏர்பேக்குகள்

அனைத்து வேரியண்ட்களிலும் 9 ஏர்பேக்குகளை கொண்டிருக்கும் என்பதால் காரில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளின் பாதுகாப்புக்கும் கூடுதல் உத்தரவாதம் கிடைக்கும். டாப் வேரியண்ட்டில் ரியர் ஏர்பேக்குகளும் உண்டு.

இன்போடெயின்மென்ட் சிஸ்டம்

இன்போடெயின்மென்ட் சிஸ்டம்

நேவிகேஷன், மல்டிமீடியா வசதிகளை தரும் மல்டி டச் திரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வருகிறது.

அடாப்ட்டிவ் ஹெட்லைட்

அடாப்ட்டிவ் ஹெட்லைட்

வளைவுகளில் திரும்பும்போது அதற்கு தகுந்தாற்போல், ஒளியை பாய்ச்சும் திறன் கொண்ட அடாப்டிவ் ஹெட்லைட்டுகளை கொண்டிருக்கும்.

பிற அம்சங்கள்

பிற அம்சங்கள்

கண்ணாடி கூரை, ரேடார் அஸிஸ்ட் குரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட தற்கால தொழில்நுட்பங்கள் பலவற்றுடன் வாடிக்கையாளர்களை அசத்த விரைவில் வருகிறது ஸ்கோடா ஆக்டாவியா.

Most Read Articles
English summary
As we told all our readers earlier during the year that Skoda will be launching 6 new models of their cars in 2013, with Skoda Octavia being the most awaited launch. We brought to you spy images of the car couple of times ago from Pune and Mumbai but here we are again with clearest images, shot by Powerdrift.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X