170 டன் விமானத்தை கட்டி இழுத்து நிசான் பேட்ரோல் எஸ்யூவி உலக சாதனை

Written By:

170 டன் எடையுடைய சரக்கு விமானத்தை இழுத்து நிசான் பேட்ரோல் எஸ்யூவி புதிய உலக சாதனை படைத்துள்ளது. கடந்த வியாழக்கிழமை ஷார்ஜா விமான நிலையத்தில் இதற்கான நிகழ்ச்சி நடந்தது.

இல்லூஷின்-2 76 என்ற சரக்கு விமானத்தை நிசான் பேட்ரோல் கட்டி இழுத்து உலக சாதனை படைத்துள்ளது. சரக்குகள் ஏற்றப்பட்டு, எரிபொருள் நிரப்பப்பட்ட அந்த விமானத்தின் மொத்த எடை 170 டன்னாக இருந்தது.

மொத்தம் 50 மீட்டர் தூரத்துக்கு அந்த விமானத்தை நிசான் பேட்ரோல் இழுத்துச் சென்றதை கண்ட பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். தவிர, கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இந்த சாதனை பதிவு செய்யப்பட்டது.

முந்தைய சாதனை

முந்தைய சாதனை

கடந்த 2006ம் ஆண்டு ஃபோக்ஸ்வேகன் டூரக் எஸ்யூவி 155 டன் எடை கொண்ட போயிங் 747 விமானத்தை கட்டி இழுத்ததே இதுவரை உலக சாதனையாக இருந்தது. இந்த சாதனையை நிசான் பேட்ரோல் முறியடித்துள்ளது.

நிசான் பேட்ரோல்

நிசான் பேட்ரோல்

1951ம் ஆண்டு முதல் தற்போது வரை உற்பத்தியில் இருக்கும் மாடல் இது. டட்சன் பிராண்டிலும், ஆஸ்திரேலியாவில் ஃபோர்டு மாவெரிக் என்ற பெயரிலும், இந்தியாவில், ஜபல்பூரில் 1969 முதல் 1999 வரை ஜோங்கா பி60 என்ற பெயரிலும் ராணுவ பயன்பாட்டிற்காக உற்பத்தி செய்யப்பட்டது. இந்தியா தவிரவும் பல்வேறு நாடுகளில் அதிக அளவில் ராணுவ வாகனமாக பயன்படுத்தப்படுகிறது.

 6ம் தலைமுறை

6ம் தலைமுறை

இப்போது விற்பனையில் இருப்பது 6ம் தலைமுறை மாடல். 2010ம் ஆண்டு அரிமுகம் செய்யப்பட்டது. இதன் சொகுசு மாடல் இன்ஃபினிட்டி பிராண்டில் க்யூஎக்ஸ்56 என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் 4 வேரியண்ட்களில் கிடைக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த எஸ்யூவியில் 400 எச்பி பவரையும், 560 என்எம் டார்க்கையும் அளிக்கும் 5.6 லிட்டர் வி8 எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் துணைபுரிகிறது. அனைத்து வீல்களுக்கும் பவரை பகிர்ந்தளிக்கிறது.

சூப்பர் எஞ்சின்

சூப்பர் எஞ்சின்

இந்த விமானத்தை இழுத்த சக்திமிக்க நிசான் பேட்ரோல் எஞ்சினை பல்வேறு நாடுகளில் இருக்கும் பெர்ஃபார்மென்ஸ் கார் விரும்பிகள் பயன்படுத்துகின்றனர். இதனை எளிதாகவும், விரும்பும் வகையிலும் டியூனிங் செய்ய முடிவதே காரணமாக கூறப்படுகிறது.

உலக சாதனை வீடியோ

ஷார்ஜா விமான நிலைய தலைவர் டாக்டர் அல்ஹஜ்ரி முன்னிலையில் விமானத்தை கட்டி இழுத்த நிசான் பேட்ரோல் எஸ்யூவியின் சாதனையை வீடியோவில் காணலாம்.

மேலும்... #nissan #off beat #நிசான்
English summary
Nissan Patrol, an all-wheel drive SUV set a new Guinness World Record for ‘the heaviest object pulled by a production car' by pulling a 170 tonne (1,70,000 kg) Ilyushin Il-76 cargo plane over a Distance of 50 meters.
Story first published: Monday, August 26, 2013, 8:30 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos