மேம்படுத்தப்பட்ட மைக்ராவின் தகவல்களை வெளியிட்ட நிசான்

இந்த மாத துவக்கத்தில் புதிய மைக்ரா காரின் படங்களை நிசான் வெளியிட்டு இருந்தது. ஐரோப்பிய மார்க்கெட்டை தொடர்ந்து இந்தியாவிலும் விரைவில் இந்த கார் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் மைக்ராவின் படங்கள் மற்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

முந்தைய மாடலைவிட அதிக தரமும், சொகுசும், வசதிகளுடன் பளிச்சிடும் வகையில் இருக்கும் புதிய மைக்ரா நிச்சயம் வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய மாடலில் இருக்கும் அம்சங்களில் அதிக மாற்றங்கள் இல்லாமல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மைக்ரா டீசர்

மைக்ரா டீசர்

நிசான் இந்தியா நிறுவனம் வெளியிட்டிரு்ககும் டீசர் படம்.

முகப்பில் மாற்றம்

முகப்பில் மாற்றம்

முகப்பு கிரில்லில் வி போன்ற குரோம் பட்டை கொடுக்கப்பட்டுள்ளது புதிதாக தெரிகிறது. ஹெட்லைட்டுகள், பானட், முன்பக்க பம்பர் ஆகியவை மாற்றங்கள் கண்டுள்ளன.

எல்இடி விளக்குகள்

எல்இடி விளக்குகள்

டெயில் லைட்டில் எல்இடி விளக்குகளுடன் வருகிறது.

 புதிய வண்ணங்கள்

புதிய வண்ணங்கள்

பசிபிக் புளூ மற்றும் பீஜ் ஆகிய இரு புதிய வண்ணங்களில் வருகிறது.

சன்ரூஃப்

சன்ரூஃப்

ஐரோப்பிய மாடலை போன்றே இந்தியாவிலும் பானரோமிக் சன்ரூஃப் கொண்ட மாடலும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. ஆனால், நிசான் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

அலாய் வீல்கள்

அலாய் வீல்கள்

டாப் வேரியண்ட்டுகள் 16 இஞ்ச் அலாய் வீல்களுடன் கிடைக்கும்.

இன்டிரியர்

இன்டிரியர்

தரமிக்க பிளாஸ்டிக்குகள் மற்றும் பாகங்களுடன், பியானோ பிளாக் என்ற கருப்பு வண்ணம் கொண்ட சென்ட்ரல் கன்சோல் ஆகியவை மைக்ராவின் பிரிமியம் அந்தஸ்தை உயர்த்துவதாக இருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

தற்போது விற்பனையில் இருக்கும் மைக்ரா காரில் இருக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் விற்பனைக்கு வரும்.

 சிவிடி டிரான்ஸ்மிஷன்

சிவிடி டிரான்ஸ்மிஷன்

இந்தியாவில் மேனுவல் தவிர, சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மாடலிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது கூடுதல் தகவல்.

நோ ஸ்டார்ட் ஸ்டாப்

நோ ஸ்டார்ட் ஸ்டாப்

ஐரோப்பிய மாடலில் ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பம் இருக்கிறது. ஆனால், இந்திய மாடலில் இந்த தொழில்நுட்பத்துடன் வர வாய்ப்பு இல்லை என தெரிகிறது.

பார்க் அசிஸ்ட்

பார்க் அசிஸ்ட்

பார்க் அசிஸ்ட் சிஸ்டம் மற்றும் விரும்பும் டிசைனில் அலாய் வீல்களை தேர்வு செய்யும் ஆப்ஷனுடன் கிடைக்கும்.

மைலேஜ்

மைலேஜ்

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 18.44 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 23.44 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்றளித்துள்ளது. ஆனால், ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுகம் குறித்தும், அதன் மைலேஜ் குறித்தும் இதுவரை தகவல் இல்லை.

 வேரியண்ட்கள்

வேரியண்ட்கள்

புதிய மைக்ரா கீழ்க்கண்ட வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது.

Petrol MT - XL, XL (O)

Petrol CVT - XV CVT

Diesel MT - XL, XL (O), XV, XV Premium

 ஏர்பேக்ஸ்

ஏர்பேக்ஸ்

டாப் வேரியண்ட்களில் இரண்டு ஏர்பேக்குகளும், எக்ஸ்வி பிரிமியம் டீசல் வேரியண்ட்டில் 4 ஏர்பேக்குகளுடனும் கிடைக்கும்.

பனி விளக்குகள்

பனி விளக்குகள்

எக்ஸ்வி பிரிமியம் வேரியண்ட்டில் பனி விளக்குகள், ரியர் ஸ்பாய்லர் ஆகியவற்றுடன் கிடைக்கும்.

ஏபிஎஸ் சிஸ்டம்

ஏபிஎஸ் சிஸ்டம்

எக்ஸ்எல் என்ற பேஸ் வேரியண்ட்டை தவிர்த்து மற்ற அனைத்து வேரியண்ட்களிலும் ஏபிஎஸ்+ இபிடி, பிரேக் அசிஸ்ட் ஆகிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் மைக்ரா கிடைக்கும்.

Most Read Articles
English summary
Japanese car maker Nissan is working on facelifted Micra and the company revealed Indian spec version and here are the Images and brochures of the Indian version with features in detail.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X