பொன்விழா: 911 கரீராவின் ஸ்பெஷல் எடிசனை வெளியிடும் போர்ஷே

கடந்த 1963ம் ஆண்டு பிராங்ஃபர்ட் ஆட்டோ ஷோவில்தான் போர்ஷே 911 ஸ்போர்ட்ஸ் கூபே கார் அறிமுகம் செய்யப்பட்டது. காலங்கடந்தாலும், தனது பாரம்பரிய டிசைன் தாத்பரியத்தை தாங்கி வந்து கொண்டிருக்கும் போர்ஷே 911 கார் தற்போது பொன்விழா கண்டுள்ளது.

இதனை கொண்டாடும் விதமாக தற்போது புதிய 911 கரீரா எஸ் ஸ்பெஷல் எடிசன் காரை போர்ஷே வெளியிட்டுள்ளது. இந்த பொன்விழா பதிப்பு கார் வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள பிராங்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. மேலும், அந்த மாதமே விற்பனையும் துவங்க இருக்கிறது. மொத்தம் 1963 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். ரூ.80 லட்சம் விலையில் விற்பனைக்கு வருகிறது.

 எஞ்சின்

395 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.8 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சினின் பவரை 7 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வீல்களுக்கு கடத்தும்.

 உந்துசக்தி

மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல் 0-100 கிமீ வேகத்தை 4.5 வினாடிகளிலும், ஆட்டோமேட்டிக் மாடல்4.3 வினாடிகளிலும் எட்டும்.

டாப் ஸ்பீடு

மணிக்கு அதிகபட்சமாக 300 கிமீ வரை செல்லும் அம்சங்களை கொண்டிருக்கிறது.

ஸ்பெஷல் எடிசன்

கரீரா 4 மாடலின் பாடிதான் இந்த சிறப்பு பதிப்பு காரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது கரீரா எஸ் மாடலைவிட பின்புறத்தில் 44 மிமீ கூடுதல் அகலம் கொண்டதாக இருக்கிறது.

பொன்விழா பேட்ஜ்

காரின் பின்புறத்தில் 911 50 என்று பொன்விழா பதிப்பை குறிக்கும் பேட்ஜ் பதிக்கப்பட்டிருக்கும். இரட்டை சைலன்சர், 5 ஸ்போக் 20 இஞ்ச் அலாய் வீல்கள், குரோம் பூச்சு கொண்ட கதவு ஃபிரேம்கள் ஆகியவை கூடுதல் வசீகரத்தை கொடுக்கும்.

இரண்டு வண்ணங்களில்

கிராஃபைட் கிரே, கேஸர் கிரே மெட்டாலிக் ஆகிய இரண்டு வண்ணங்களில் மட்டும் இந்த சிறப்பு பதிப்பு கார்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இன்டிரியர்

பழைய 911 காரின் இன்டிரியரை நினைவூட்டும் வகையில் இந்த கார் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இருக்கை, சென்ட்ரல் கன்சோல் ஆகியவற்றிலும் பழமையின் டிசைன் பாதிப்பு இருக்கிறது.

பேட்ஜ்

ஹெட்ரெஸ்ட்டுகளில் பொன்விழா பதிப்பு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.

இன்போடெயின்மென்ட் சிஸ்டம்

இந்த காரில் 4.6 இஞ்ச் திரை கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டிருக்கிறது. 14 வே எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்டபிள் டிரைவர் இருக்கை உள்ளது. கிளைமேட் கன்ட்ரோல், பை-ஸினான் ஹெட்லைட்டுகள் கூடுதல் அம்சங்கள்.

 சஸ்பென்ஷன்

இதில், ஆக்டிவ் சஸ்பென்ஷன் மேனெஜ்மென்ட் சிஸ்டம் கொண்டிருப்பதால் அதிர்வுகள் எளிதாக உள்வாங்கப்படும்.

அலாய் வீல்

5 ஸ்போக்குகள் கொண்ட 20 இஞ்ச் அலாய் வீல்களை கொண்டுள்ளது.


Most Read Articles
English summary
The first Porsche 911 sports coupe was revealed to the world in 1963 at the Frankfurt Auto Show. On its Golden Jubilee year Porsche has announced a 50 Years Edition 911 Carrera S to mark the occasion. Porsche 911 Carrera S 50 Years Edition will also be unveiled at the Frankfurt Auto Show in September this year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X