9 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன், 24.48 கிமீ/லி மைலேஜ்: புதிய எவோக்

9 ஸ்பீடு இசட்எஃப் டிரான்ஸ்மிஷன் கொண்ட எவோக் காரை லேண்ட்ரோவர் அறிமுகம் செய்துள்ளது. மார்ச்சில் நடந்த ஜெனீவா மோட்டார் ஷோவில் இந்த புதிய டிரான்ஸ்மிஷனை லேண்ட்ரோவர் பார்வைக்கு வைத்திருந்தது.

கூடுதல் எரிபொருள் சிக்கனம், குறைந்த கார்பன் புகை போன்ற அம்சங்களை கொண்ட இந்த 9 ஸ்பீடு இசட்எஃப் டிரான்ஸ்மிஷன் தற்போது 2014 எவோக் ஆடம்பர எஸ்யூவியில் பொருத்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இந்த 9 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்ட எவோக் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

புதிய 9 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்ட எவோக் கார் 11.4 சதவீதம் கூடுதல் மைலேஜையும், 9.5 சதவீதம் குறைவான கார்பன் புகையையும் வெளிப்படுத்துவதாக இருக்கும்.

அதிகபட்ச மைலேஜ்

அதிகபட்ச மைலேஜ்

148எச்பி ஆற்றலை வழங்கும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட எவோக் கார் லிட்டருக்கு 24.48 கிமீ மைலேஜை தருவதோடு, ஒரு கிலோமீட்டருக்கு 129 கிராம் கார்பனை மட்டும் வெளியிடுவதாக இருக்கும் என லேண்ட்ரோவர் தெரிவித்திருக்கிறது.

எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

பெட்ரோல், டீசல் என எவோக்கின் இரு எஞ்சின் மாடல்களிலும் இந்த 9 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் துணைபுரியும்.

கூடுதல் சிறப்பு

கூடுதல் சிறப்பு

வேகத்துக்கு தக்கவாறு ஃப்ரண்ட் வீல் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டத்துக்கு தானாக மாறிக்கொள்ளும் வசதிதான் ஆக்டிவ் டிரைவ்லைன். கார் 35 கிமீ அல்லது அதற்கு மேலான வேகத்தில் செல்லும்போது ஃப்ரண்ட் வீல் டிரைவிலும், 35 கிமீ.,க்கும் குறைவான வேகத்தில் தொடர்ந்து சென்றால் 4 வீல் டிரைவ் சிஸ்டமும் தானாக மாறிக் கொள்ளும். இது 300 மில்லி செகண்டுக்குள் மாறும்.

ஆக்டிவ் டார்க் பயாஸிங்

ஆக்டிவ் டார்க் பயாஸிங்

ஆக்டிவ் டிரைவ்லைன் தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியாக இது செயல்படும். அனைத்து விதமான சாலை நிலைகளிலும் பின்புற வீல்களுக்கு சீரான பவரையும், கூடுதல் டார்க்கையும் அளித்து எளிதாக காரை செலுத்துவதற்கான தொழில்நுட்பமாக இது பயன்படுகிறது.

 டார்க் வெக்டரிங்

டார்க் வெக்டரிங்

இது தனியான பாதுகாப்பு வசதி. கார் வழுக்கிச் செல்லாமலும், கட்டுப்பாட்டை இழக்காமலும் இருப்பதற்காக அனைத்து சக்கரங்களுக்கும் சீரான பிரேக் பவரை அனுப்பும் தொழில்நுட்பம். இது நிரந்தர தொழில்நுட்பமாக எவோக்கில் இடம்பெற்றிருக்கும்.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

புதிய அலாய் வீல்கள், புதிய கலர்கள் மற்றும் கூடுதல் சொகுசு மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் வருகிறது 2014 மாடல் எவோக்.

Most Read Articles
English summary
The production version of the radical new German ZF developed nine speed transmission which Land Rover showcased at the Geneva Motor Show earlier this year will debut in the 2014 Evoque, now revealed.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X