சவால்களை கடந்த ரேஞ்ச்ரோவர்களின் பயணம் மும்பையில் நிறைவு!

லண்டனிலிருந்து கிளம்பிய ஹைபிரிட் ரேஞ்ச்ரோவர்களின் 17,000 கிமீ தூரத்துக்கான பயணம் மும்பையில் நிறைவடைந்தது. லேண்ட்ரோவர் நிறுவனம் உருவாக்கியுள்ள ஹைபிரிட் ரேஞ்ச்ரோவர்களை உற்பத்தி நிலைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு அதன் பராக்கிரமங்களை வெளிக்கொணரும் வகையில் இந்த பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது

கரடு முரடான சாலைகள் மற்றும் பல்வேறு தட்பவெப்ப சூழ்நிலைகளை கடந்து இரண்டு மாதங்களில் இந்த பயணத்தை ஹைபிரிட் ரேஞ்ச்ரோவர்கள் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளன. ஹைபிரிட் காரில் இந்த அளவு நீண்ட பயணம் மேற்கொண்டதும் சாதனையாக கூறப்படுகிறது. லண்டனிலிருந்து டாடா மோட்டார்ஸ் தலைமையகத்தில் நிறைவு பெற்ற இந்த நீண்ட பயணத்தின் நிகழ்வுகள், வியக்க வைத்த மைலேஜ் உள்ளிட்ட தகவல்களை செய்தித் தொகுப்பை ஸ்லைடரில் காணலாம்.

பயணத் துவக்கம்

பயணத் துவக்கம்

கடந்த ஆகஸ்ட் மாதம் 22ந் தேதி லேண்ட்ரோவரின் தாயகமான இங்கிலாந்தின் சோலிஹல் ஆலையிலிருந்து புறப்பட்டது.

பயண வழி

பயண வழி

53 நாட்கள் நீடித்த இந்த பயணம் 13 நாடுகள் வழியாக 16,853 கிமீ தொலைவை கடந்து தனது இலக்கான மும்பை டாடா மோட்டார்ஸ் தலைமையகத்தை வந்தடைந்துள்ளது.

துணை வாகனங்கள்

துணை வாகனங்கள்

இந்த பயணத்தில் 3 ஹைபிரிட் ரேஞ்ச்ரோவர்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்கு துணையாக 4 உதவி வாகனங்களும் துணைக்கு வந்தன.

நாடுகள்

நாடுகள்

பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, போலந்து, உக்ரைன், ரஷ்யா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், சீனா, நேபாளம் வழியாக கடந்த 14ந் தேதி இந்தியாவை வந்தடைந்தன.

சில்க் ரூட்

சில்க் ரூட்

2,000 ஆண்டுகள் பெருமை வாய்ந்த சில்க் வழித்தடம் வழியாக இந்த பயணத்தை நிறைவு செய்துள்ளன ஹைபிரிட் ரேஞ்ச்ரோவர்கள்.

சாகசப் பயணம்

சாகசப் பயணம்

கரடு முரடான சாலைகள் நிறைந்த சில்க் வழித்தடத்தில் ஹைபிரிட் வாகனங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய பயணத்திட்டம் இது.

 தட்ப வெப்பம்

தட்ப வெப்பம்

ஹைபிரிட் ரேஞ்ச்ரோவர்கள் கடந்து வந்த பாதைகளில் மைனஸ் 10 டிகிரி முதல் 43 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்ப நிலைகளை ஹைபிரிட் ரேஞ்ச்ரோவர்கள் தாண்டியும், தாங்கியும் வந்துள்ளன.

மோசமான சாலைகள்

மோசமான சாலைகள்

உயரமான மலைப்பாதைகள், கணவாய்கள் மற்றும் ஆறுகளை கடந்து இந்த பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளன ஹைபிரிட் ரேஞ்ச்ரோவர்கள்.

மூச்சுவிடுவதே சிரமம்

மூச்சுவிடுவதே சிரமம்

கடல் மட்டத்திலிருந்து 5,379 மீட்டர் உயரமான பகுதியில் உள்ள சாலையிலும், 10 சதவீதம் அளவுக்கே ஆக்சிஜன் குறைவாக இருக்கும் மலைப் பாதைகளையும் இக்குழுவினர் கடந்து வந்துள்ளனர்.

இதுவும் சாதனைதான்

இதுவும் சாதனைதான்

சீனாவின் ஜின்ஜியாங் - திபெத் இடையிலான கடல் மட்டத்திலிருந்து 5,300 மீட்டர் உயரமுள்ள மலைச் சாலையை கடந்த முதல் வெளிநாட்டு பதிவு கொண்ட கார் என்ற பெருமையையும் இந்த ரேஞ்ச்ரோவர்களுக்கு கிடைத்துள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

ஹைபிரிட் ரேஞ்ச்ரோவர்களில் 3.0 லிட்டர் டர்போ டீசர் எஞ்சினுடன், 35 kW எலக்ட்ரிக் மோட்டார் இணைந்து செயல்புரியும் நுட்பம் கொண்டது.

 கைகொடுத்த ஹைபிரிட் நுட்பம்

கைகொடுத்த ஹைபிரிட் நுட்பம்

அதிக பாரம் ஏற்றப்பட்டு வந்ததால், ஆக்சிஜன் குறைவான பகுதிகளில் டீசல் எஞ்சினின் எரிசக்தி திறன் செயல்பாடு சிறப்பாக இல்லாதபோது, அதற்கு எலக்ட்ரிக் மோட்டார்கள் மிகுந்த உறுதுணையாக இருந்ததாக பயணக் குழுவினர் தெரிவித்தனர்.

வியக்க வைத்த மைலேஜ்

வியக்க வைத்த மைலேஜ்

பல கரடுமுரடான சாலை நிலைகளில் வந்த ஹைபிரிட் ரேஞ்ச்ரோவர்கள் லிட்டருக்கு 15.3 கிமீ மைலேஜ் முதல் 15.7 கிமீ மைலேஜ் வரை கொடுத்ததாக லேண்ட்ரோவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சர்தான் பிரச்னை

பஞ்சர்தான் பிரச்னை

பல்வேறு சவால் நிறைந்ததாக இந்த பயணம் இருந்தாலும், சிறிய பிரச்னைகளுடன் வெற்றிகரமாக இலக்கை எட்டியுள்ளது. அதாவது, வழியில் அனைத்து வாகனங்களையும் சேர்த்து 15 முறை பஞ்சர் ஆனதாம். தவிர, பெரிய பள்ளங்களில் விழுந்தபோது 4 வீல்கள் சேதமடைந்துவிட்டதாகவும், 4 விண்ட் ஸ்கிரீன்களில் கற்கள் அடித்து உடைந்து போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரான்ஸ்மீட்டர்

டிரான்ஸ்மீட்டர்

ஹைபிரிட் ரேஞ்ச்ரோவர்களின் திறன், செயல்பாடு உள்ளிட்டவற்றை இங்கிலாந்திலுள்ள கேடோனிலுள்ள லேண்ட்ரோவர் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த எஞ்சினியர்கள் தெரிந்து கொள்ளும் விதத்தில் டிரான்ஸ்மீட்டர்கள் பொருத்தப்பட்டிருந்தன. இதன்மூலம், 300 ஜிபி அளவுக்கு தொழில்நுட்ப விபரங்கள் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சின் செயல்பாடு

எஞ்சின் செயல்பாடு

மலை பிரதேசங்கள் மற்றும் அதிக வெப்பமுடைய பகுதிகளில் எஞ்சினின் செயல்பாடுகளை நேரடியாக தெரிந்துகொண்டு, அதற்கு ஏற்றாற்போல் மாறுதல்களையும், தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் லேண்ட்ரோவர் எஞ்சினியர்கள் முடிவு செய்துள்ளனர்.

சாதனை

சாதனை

ஜெய்பூரிலிருந்து மும்பை வரையிலான கடைசி கட்ட பயணத்தில் லேண்ட்ரோவர் ஹைபிரிட் துறை தலைவர் பீட்டர் ரிச்சிங்ஸ் கலந்து கொண்டார். அப்போது, உலகின் முதல் டீசல் ஹைபிரிட் கார்கள் இந்த பயணத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது பெருமிதம் அளிக்கிறது," என்றார்.

 வெற்றி... வெற்றி...

வெற்றி... வெற்றி...

அதிக எரிபொருள் சிக்கனம், குறைந்த கார்பன் புகை உள்ளிவட்டற்றை தாரக மந்திரமாக கொண்டு இந்த ரேஞ்ச்ரோவர்களை வடிவமைத்துள்ளோம். இதனை அனைவர்க்கும் எளிதாக உணர்த்தும் வகையில் இந்த பயணத்திட்டம் வெற்றிகரமான நிறைவு பெற்றுள்ளது," என்று லேண்ட்ரோவர் தெரிவித்துள்ளது.

பேட்டரி ஆற்றல்

பேட்டரி ஆற்றல்

முழுவதுமாக மின் மோட்டாரில் இயங்கும் வசதியும் இருக்கிறது. ஆனால், ஒன்றரை கிலோமீட்டர் தூரம் மட்டுமே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பேட்டரி ஆற்றலில் செல்ல முடியும். தவிரவும், மணிக்கு அதிகபட்சமாக 48 கிமீ வேகத்தில் மின் மோட்டாரில் காரை இயக்க முடியும்.

Most Read Articles
English summary
This story is about the awe inspiring journey made by three Land Rover Range Rover Hybrid Prototype SUVs. The Silk Trail 2013 expedition started in UK and ended in India. The intercontinental expedition lasting nearly two months saw the team cover a distance of nearly 17,000 kms
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X