849 கிமீ தூர பாலைவனத்தை 10 மணி நேரத்தில் சொடக்கு போட்டு கடந்த ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட்

By Saravana

உலகின் மிகப்பெரிய பாலைவனங்களில் ஒன்றான அரேபிய பாலைவனத்தை குறுகிய நேரத்தில் கடந்து ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி புதிய சாதனையை பதிவு செய்துள்ளது. புதிய ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவியின் செயல்திறனை நிரூபிக்க லேண்ட்ரோவர் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.

அதில், ஒரு முயற்சியாக இந்த சவாலான பயணத்திற்கு லேண்ட்ரோவர் ஏற்பாடு செய்திருந்தது. அரேபிய பாலைவனத்தை குறுகிய நேரத்தில் கடந்த தயாரிப்பு நிலை கார் என்ற பெருமையையும் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் பெற்றுள்ளது. இந்த நிகழ்வின் படங்களுடன் கூடிய முழுமையான தகவல்கள் மற்றும் பாலைவனத்தில் சாதனை புரியும் உத்வேகத்தில் சீறிப்பாய்ந்து சென்ற ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவியின் வீடியோவை காண்பதற்கு ஸ்லைடருக்கு வாருங்கள்.

எம்ப்ட்டி குவார்ட்டர்

எம்ப்ட்டி குவார்ட்டர்

உலகின் மிகப்பெரிய பாலைவனங்களில் ஒன்றாக கருதப்படும் Empty Quarter என்று கூறப்படும் அரேபிய பாலைவனப் பகுதியை அதிவேகத்தில் கடந்த தயாரிப்பு நிலை கார் என்ற பெருமையையும், சாதனையையும் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் படைத்துள்ளது.

 பயணம்

பயணம்

சவுதி அரேபியாவின் வாதி அட்டா வசீர் என்ற இடத்திலிருந்து ஐக்கிய அரபு எமிரேட் நாட்டு எல்லை வரையிலான 849 கிமீ தூரத்திலான பாலைவனத்தை ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் கடந்துள்ளது.

சாதனை

சாதனை

849 கிமீ தூர பாலைவனத்தை 10 மணி நேரம் 22 நிமிடங்களில் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் கடந்துள்ளது. சராசரியாக மணிக்கு 81.87 கிமீ வேகத்தில் ரேஞ்ச்ரோவர் பயணித்துள்ளது.

ரேஸ் வீரர்

ரேஸ் வீரர்

ஸ்பெயினை சேர்ந்த மோய் டொரல்லடோனா என்ற 47 வயது டக்கர் ராலி கார் பந்தய வீரர் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட்டை செலுத்தினார்.

எஞ்சின்

எஞ்சின்

சாதனை நிகழ்ச்சிய ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவியில் 510 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருந்தது.

மாற்றங்கள்

மாற்றங்கள்

இந்த சாதனை பயணத்துக்காக பெரிய அளவிலான மாற்றங்கள் காரில் செய்யப்படவில்லை. சாதாரண டயர்களே இந்த எஸ்யூவியில் பொருத்தப்பட்டிருந்தது. காருக்கு கீழே மட்டும் மணலில் சிக்காதவாறு பிளேட் மட்டும் பொருத்தப்பட்டிருந்தது. இதுதவிர, கூடுதலாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சவால்

சவால்

பாலைவன மணலில் காரை அதிவேகத்தில் ஓட்டுவது மிகவும் சவால் நிறைந்தது. இதற்கு அதிக தொழில்நுட்ப திறமை அறிந்திருப்பது அவசியம் என்பதோடு, எந்த இடத்தில் வேகமாக செல்ல வேண்டும், எந்த இடத்தில் வேகத்தை குறைத்து ஓட்ட வேண்டும் என்று சரியான சமயத்தில் முடிவெடுத்து ஓட்ட வேண்டும். இது மிகவும் சவால் நிறைந்த பயணமாகவே இருந்தது என்று காரை ஓட்டிய டொரல்லாடோனா குறிப்பிட்டார்.

சூப்பரான எஸ்யூவி

சூப்பரான எஸ்யூவி

இதுபோன்ற பயணங்களுக்கு சிறந்த கட்டுமானம் மற்றும் சிறப்பு தொழில்நுட்ப வசதிகள் கொண்ட கார் தேவைப்படும். இவை அனைத்தும் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் காரில் அமைந்துள்ளது. பாலைவனத்தில் ஓட்டுவதற்கு ஏற்ற சிறப்பான காராக இருந்தது என்று ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட்டுக்கு அவர் புகழாராம் சூட்டினார்.

சீறிப்பாயும் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் வீடியோ

பாலைவனத்தில் சீறிப்பாய்ந்து இலக்கை நோக்கி விரைந்த ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் வீடியோவை காணத் தவறாதீர்கள். கடந்த ஜூன் மாதம் நடந்த ஏற்றமான மலைப்பாதையை அதிவேகத்தில் கடந்த தயாரிப்பு நிலை கார் என்ற பெருமையையும் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் பெற்றது. 20 கிமீ மலையேற்றப் பாதையை வெறும் 12:35.61 நிமிடங்களில் ரேஞ்ச்ரோவர் கடந்தது. சராசரியாக மணிக்கு 95.23 கிமீ வேகத்தில் இந்த சாதனையை புரிந்தது நினைவிருக்கலாம்.

Most Read Articles
English summary
Earlier this month Land Rover used the Range Rover Sport to set a new record. That of the fastest time for a production vehicle to cross the Arabian Desert. Actually, this is not the first speed record set by the 2014 Range Rover Sport. More on that later.
Story first published: Monday, November 11, 2013, 11:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X