மேம்படுத்தப்பட்ட டஸ்ட்டரை அறிமுகப்படுத்தும் ரெனோ!

உலக அளவில் டஸ்ட்டர் காம்பெக்ட் எஸ்யூவி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மாடலாக வலம் வருகிறது. இந்த நிலையில், டஸ்ட்டரை மேம்படுத்தி அறிமுகம் செய்வதற்கு ரெனோ மற்றும் அதன் துணை பிராண்டான டேஸியா நிறுவனங்கள் ஆயத்தமாகி வருவதாக பிரான்ஸிலிருந்து வெளிவரும் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

வரும் செப்டம்பரில் நடைபெற இருக்கும் பிராங்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் இந்த புதிய டஸ்ட்டர் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய டஸ்ட்டரை தற்போது பல்வேறு இடங்களில் வைத்து ரெனோ சோதனை நடத்தி வருகிறது. புதிய டஸ்ட்டரின் முகப்பு மற்றும் பின்புறம் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர, புதிய தொழில்நுட்ப வசதிகள், டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், உயர்தர அப்ஹோல்ஸ்டரியுடன் புதிய டஸ்ட்டர் வருகிறது. எஞ்சினிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். குறைந்த கார்பன் புகை வெளியீடு, அதிக எரிபொருள் சிக்கனம், சிறந்த பெர்ஃபார்மென்ஸ் கொண்டதாக புதிய டஸ்ட்டரின் எஞ்சின்கள் டியூனிங் செய்யப்பட்டிருக்கும் என ரெனோ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டி கிராஸ் கான்செப்ட்

டி கிராஸ் கான்செப்ட்

கடந்த ஆண்டு சாவ் பாவ்லோ ஆட்டோ கண்காட்சியில் புதிய டஸ்ட்டரின் கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

டி கிராஸ் கான்செப்ட்டை ஒத்ததாகவே புதிய டஸ்ட்டர் அதிக மாற்றம் இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

விற்பனை

விற்பனை

ரெனோவின் தாயகமான பிரான்ஸில் புதிய டஸ்ட்டர் முதலில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதன் அடிப்படையில் மற்ற மார்க்கெட்டுகளுக்கான விலை நிர்ணயிக்கப்படும்.

ஈக்கோஸ்போர்ட் போட்டி

ஈக்கோஸ்போர்ட் போட்டி

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியால் சர்வதேச அளவில் டஸ்ட்டருக்கு நேரடி போட்டி நிலவுகிறது. எனவே, புதிய டஸ்ட்டரை ரெனோ அறிமுகப்படுத்த இருக்கிறது.

இந்தியாவுக்கு...

இந்தியாவுக்கு...

அடுத்த ஆண்டு இந்தியாவில் புதிய டஸ்ட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
A French daily, la tribune, has now reported that Renault has under its belt, an extensive facelift for the Duster ready. This thoroughly refreshed Duster is expected to be premiered in September at the Frankfurt Auto Show.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X