தரத்தில் சிறந்தது டஸ்ட்டர்: ஜேடி பவர் ஆய்வு முடிவில் தகவல்

By Saravana

சிறந்த தரம் கொண்ட எஸ்யூவி மாடல் என்ற பெருமையை ரெனோ டஸ்ட்டர் பெற்றுள்ளது. சொகுசு ரக எஸ்யூவியில் டொயோட்டா ஃபார்ச்சூனர் முதலிடத்தை பெற்றுள்ளது. ஜேடி பவர் ஏசியா பசிபிக் நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவு அறிக்கையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

புதிய கார் வாங்கிய வாடிக்கையாளர்களிடம் கார் வாங்கிய முதல் 6 மாதத்தில் கார்களின் தரத்தை அறியும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து ரக கார்கள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சாதாரண ரக எஸ்யூவி செக்மென்ட்டில் டஸ்ட்டர்தான் பெஸ்ட் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேடி பவர் ஆய்வு

ஜேடி பவர் ஆய்வு

கடந்த ஆண்டு நவம்பர் முதல் கடந்த செப்டம்பர் வரை கார் வாங்கிய 9,070 புதிய வாடிக்கையாளர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. மொத்தம் 17 தயாரிப்பாளர்களின் 74 மாடல்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஒவ்வொரு ரகத்திலும் சிறந்த மூன்று கார்கள் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளன.

 ஆய்வு அம்சங்கள்

ஆய்வு அம்சங்கள்

எஞ்சின், டிரான்ஸ்மிஷன், வெளிப்புறம் இன்டிரியர், ஓட்டுதல் அனுபவம் உள்ளிட்டவற்றின் தரம் குறித்து வாடிக்கையாளர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. மேலும், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கார்கள் கடந்த ஆண்டு நவம்பர் முதல் கடந்த ஜூலை வரையில் தயாரிக்கப்பட்டவை.

மாடல்கள்

மாடல்கள்

மொத்தம் 15 எஸ்யூவி மாடல்களின் உரிமையாளர்கள் அளித்த தகவல்களை ஒப்பிட்டதில் தரத்தில் எஸ்யூவி என்ற பெருமையுடன் டஸ்ட்டர் முன்னிலை பெற்றது.

டாப் - 3

டாப் - 3

சொகுசு ரகத்தை தவிர்த்த ஒட்டுமொத்த எஸ்யூவி பிரிவில் டொயோட்டா ஃபார்ச்சூனர் முதலிடத்தையும், ரெனோ டஸ்ட்டர் இரண்டாவது இடத்தையும், மஹிந்திரா ஸ்கார்ப்பியோ மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.

டஸ்ட்டருக்கு அங்கீகாரம்

டஸ்ட்டருக்கு அங்கீகாரம்

டஸ்ட்டரை உருவாக்கிய போது தரம் ஒன்றே தாரக மந்திரமாக கொண்டு உருவாக்கினோம். அந்த ஒட்டுமொத்த பணியாளர்களுக்கும் கிடைத்த வெற்றிதான் இது. டஸ்ட்டருக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைத்துள்ள நேரடி அங்கீகாரம் என்பதால் நெஞ்சம் நிறைகிறது என்று ரெனோ பெருமிதம் தெரிவித்துள்ளது.

 ஹேட்ச்பேக்

ஹேட்ச்பேக்

என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் கார்களில் மாருதி ஆல்ட்டோ 800 முதலிடத்தையும், ஹூண்டாய் இயான் இரண்டாவது இடத்தையும், டாடா நானோ மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.

 பிரிமியம் ஹேட்ச்பேக்

பிரிமியம் ஹேட்ச்பேக்

மாருதி ஸ்விஃப்ட் முதலிடத்தையும், ஃபோக்ஸ்வேகன் போலோ இரண்டாவது இடத்தையும், ஹூண்டாய் ஐ20 மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது.

காம்பெக்ட் செடான்

காம்பெக்ட் செடான்

ஹோண்டா அமேஸ் கார் முதலிடத்தையும், மாருதி டிசையர் இரண்டாவது இடத்தையும் டொயோட்டா எட்டியோஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

மிட்சைஸ் செடான்

மிட்சைஸ் செடான்

மிட்சைஸ் செடான் கார் செக்மென்ட்டில் ஹோண்டா சிட்டி முதலிடத்தையும், ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ இரண்டாவது இடத்தையும், மூன்றாவது இடத்தை ஸ்கோடா ரேபிட்டும் பெற்றுள்ளன. விற்பனையில் முதல் இடத்தில் இருக்கும் ஹூண்டாய் வெர்னா முதல் மூன்று இடங்களில் வரவில்லை.

Most Read Articles
Story first published: Friday, November 29, 2013, 17:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X