சுஸுகியின் புதிய ஏ ஸ்டார் ஹேட்ச்பேக் காரின் கான்செப்ட் அறிமுகம்!

By Saravana

தாய்லாந்து சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் ஏ விண்ட் என்ற புதிய ஹேட்ச்பேக் காரின் கான்செப்ட் மாடலை சுஸுகி அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய கான்செப்ட் அடிப்படையில்தான் மாருதியின் புதிய ஏ ஸ்டார் வர இருப்பது உறுதியாகியுள்ளது.

அடுத்த ஆண்டு தயாரிப்பு நிலையை எட்ட இருக்கும் இந்த புதிய கான்செப்ட் சர்வதேச அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக சுஸுகி தெரிவித்துள்ளது. ஸ்லைடரில் புதிய ஏ விண்ட் கான்செப்ட் காரின் படங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை காணலாம்.

 புதிய பெயர்

புதிய பெயர்

எஸ்டீலோ மற்றும் ஏ ஸ்டார் கார்களுக்கு மாற்றாக நிலைநிறுத்தப்பட இருக்கும் இந்த காரை புதிய பெயரில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு சுஸுகி திட்டமிட்டுள்ளதாம்.

ஒற்றுமை

ஒற்றுமை

இந்தியாவில் ஒய்எல்-7 என்ற குறியீட்டுப் பெயரில் சோதனை செய்யப்பட்டு வரும் காருக்கும் புதிய ஏ விண்ட் கான்செப்ட் காருக்கும் டிசைனில் அதிக ஒற்றுமை தெரிகிறது. எனவே, இது புதிய ஏ ஸ்டார் காரின் கான்செப்ட் மாடல்தான் என்று ஆட்டோமொபைல் துறையினர் உறுதியாக கூறுகின்றனர்.

எஞ்சின்

எஞ்சின்

தாய்லாந்தில் 996சிசி திறன் கொண்ட பெட்ரோல் எஞ்சினுடன் சிவிடி கியர் பாக்ஸ் கொண்ட கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சுஸுகி நிறுவனம் புதிதாக தயாரித்து வரும் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் இந்த காரிலும் பொருத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட அதே 996சிசி திறன் கே சீரிஸ் எஞ்சின்தான் புதிய காரிலும் பொருத்தப்பட உள்ளது.

பவர்

பவர்

67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க்கையும் அளிக்கும் இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். பின்னர், இந்த புதிய கார் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடலிலும் வரும்.

 இந்திய தரிசனம்

இந்திய தரிசனம்

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய ஏ விண்ட் கான்செப்ட் மாடலை மாருதி பார்வைக்கு வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாறுதல்கள்

மாறுதல்கள்

ஸ்லைடரில் நீங்கள் பார்த்து வரும் ஏ விண்ட் கான்செப்ட் கார் தயாரிப்பு நிலையை எட்டும்போது, முன்பக்க கிரில், ஹெட்லைட் உள்ளிட்டவற்றில் சில மாறுதல்கள் செய்யப்படும் வாய்ப்புள்ளது.

டிசைன்

டிசைன்

எஸ்டீலோ, ஏ ஸ்டார் கார்களின் கவர்ச்சியில்லாத டிசைன் காரணமாகத்தான் விற்பனையில் பின்தங்கியது. ஆனால், புதிய ஏ ஸ்டார் கார் டிசைனில் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என சுஸுகி தெரிவித்துள்ளது.

இன்டிரியர்

இன்டிரியர்

இன்டிரியர் மிக எளிமையாகவும், கூடுதல் தரம் கொண்டதாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. ஏசி வென்ட்டுகள் உள்ளிட்ட சிலவற்றை ஸ்விஃப்ட்டில் இருந்து எடுத்து பொருத்தியுள்ளது சுஸுகி. மேலும், முன்பக்க, பின்பக்க இருக்கைகளுக்கு இடையிலான இடைவெளியிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதால், பயணிகளுக்கு சிறப்பான இடவசதியை இருப்பதோடு, பூட் ரூமிலும் போதுமான இடவசதி கிடைக்கும்.

உற்பத்தி

உற்பத்தி

அடுத்த ஆண்டு தாய்லாந்து ஆலையில் உற்பத்தி துவங்கும் என்று சுஸுகி தெரிவித்துள்ளது. அடுத்து இந்தியாவிலும் இந்த கார் உற்பத்தி செய்யப்படுவதோடு, பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.

Most Read Articles
English summary
Japanese car maker Suzuki has revealed new A wind concept at Thailand Motor Show.
Story first published: Friday, November 29, 2013, 10:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X