மே மாத விற்பனையில் டாப்-20 கார்களின் பட்டியல்

கடந்த மாத விற்பனை நிலவரப்படி, ஆல்ட்டோவை பின்னுக்குத் தள்ளி டிசையர் முதலிடத்தை பிடித்துள்ளது. நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்து வந்த ஆல்ட்டோ தனது நம்பர்-1 பட்டத்தை இழந்தது. இருப்பினும், டாப்-4 இடங்களில் வழக்கம்போல் மாருதி கார்களே இடம் பிடித்தன.

எர்டிகா, இன்னோவா, எக்ஸ்யூவி 500 ஆகிய யுட்டிலிட்டி ரக கார்களின் விற்பனையும் இறங்கு முகமாகவே இருந்தன. கடந்த ஏப்ரலில் விற்பனைக்கு வந்த அமேஸ் கிடுகிடுவென முன்னேறி 8ம் இடத்துக்கு வந்துவிட்டது. கடந்த மாதம் விற்பனையில் டாப்-20 இடங்களை பிடித்த கார் மாடல்களை ஸ்லைடரில் காணலாம்.

மாருதி டிசையர்

மாருதி டிசையர்

முந்தைய மாதங்களை காட்டிலும் விற்பனை குறைந்தபோதிலும், கடந்த மாதம் அதிகம் விற்பனையான கார் என்ற பெருமையை மாருதி டிசையர் பெற்றது. கடந்த மாதம் மொத்தம் 17,265 டிசையர் கார்கள் விற்பனையானது.

மாருதி ஆல்ட்டோ

மாருதி ஆல்ட்டோ

நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்து வந்த ஆல்ட்டோவின் விற்பனை தொடர்ந்து இறங்கு முகமாகவே இருந்து வருகிறது. கடந்த மாதம் 16,411 ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகி இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

மாருதி ஸ்விப்ட்

மாருதி ஸ்விப்ட்

கடந்த மாதம் 14,353 ஸ்விப்ட் ஹேட்ச்பேக் கார்கள் விற்பனையானது. ஸ்விப்ட் காரின் விற்பனையும் அதற்கு முந்தைய மாதத்தை காட்டிலும் வெகுவாக குறைந்து போயிருக்கிறது.

மாருதி வேகன்-ஆர்

மாருதி வேகன்-ஆர்

மாருதி வேகன்-ஆர் தொடர்ந்து 4ம் இடத்தை தக்க வைத்து வருவதோடு, விற்பனையிலும் அதிக ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் இருந்து வருகிறது. கடந்த மாதம் 12,952 வேகன்-ஆர் கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது.

மஹிந்திரா பொலிரோ

மஹிந்திரா பொலிரோ

மே மாதத்திலும் தொடர்ந்து 5வது இடத்தில் மஹிந்திரா பொலிரோ இருந்து வருகிறது. கடந்த மாதம் 9,780 பொலிரோ கார்கள் விற்பனையானது.

ஹூண்டாய் ஐ10

ஹூண்டாய் ஐ10

ஏப்ரலில் 6வது இடத்தில் இருந்த இயானை பின்னுக்குத் தள்ளி அந்த இடத்தை சிறிது வித்தியாசத்தில் பிடித்தது ஹூண்டாய் ஐ10. கடந்த மாதம் 8,469 ஐ10 கார்கள் விற்பனையானது.

ஹூண்டாய் இயான்

ஹூண்டாய் இயான்

ஒரு இடம் கீழிறிங்கி 7வது இடத்தில் இருக்கிறது ஹூண்டாய் இயான். கடந்த மாதம் 8,406 இயான் கார்கள் விற்பனையானது.

ஹோண்டா அமேஸ்

ஹோண்டா அமேஸ்

அறிமுகம் செய்யப்பட்டவுடனேயே டாப்-20 லிஸ்ட்டுக்குள் இடம் பிடித்த ஹோண்டா அமேஸ் காருக்கு கடந்த மாதமும் ஏறுமுகம்தான். கடந்த மாதம் 6,036 அமேஸ் கார்கள் விற்பனையானது. மேலும், ஏப்ரலில் 13 இடத்தில் இருந்து தற்போது 8வது இடத்துக்கு முன்னேறியுள்ளது அமேஸ்.

ஹூண்டாய் ஐ20

ஹூண்டாய் ஐ20

கடந்த மாதம் 8வது இடத்தில் இருந்த ஹூண்டாய் ஐ10 தற்போது ஒரு இடம் இறங்கி 9வது இடத்தை பிடித்தது. கடந்த மாதம் 5,701 ஐ20 கார்கள் விற்பனையானது.

இன்டிகா+விஸ்டா

இன்டிகா+விஸ்டா

கடந்த மாதம் 5,500 இன்டிகா மற்றும் இன்டிகா விஸ்டா கார்கள் விற்பனையாகி 10வது இடத்தை பிடித்தது. ஏப்ரல் நிலவரத்தின்படி 9வது இடத்தில் இருந்த இன்டிகா வரிசை தற்போது 10 வது இடத்துக்கு இறங்கியுள்ளது.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

கடந்த மாதம் 5,165 ஸ்கார்ப்பியோ கார்கள் விற்பனையானது. இதன்மூலம், டஸ்ட்டரை விட ஒரு இடம் முன்னே இருக்கிறது ஸ்கார்ப்பியோ.

ரெனோ டஸ்ட்டர்

ரெனோ டஸ்ட்டர்

கடந்த மாதம் 5,146 டஸ்ட்டர் எஸ்யூவி கார்களை ரெனோ விற்பனை செய்தது. மேலும், ஸ்கார்ப்பியோவுக்கு பெரும் போட்டியாக விளங்கி வரும் டஸ்ட்டர் டாப்-10 லிஸ்ட்டில் இருந்து தற்போது 12வது இடத்துக்கு இறங்கியுள்ளது.

ஹூண்டாய் வெர்னா

ஹூண்டாய் வெர்னா

கடந்த மாதம் 4,710 ஹூண்டாய் வெர்னா செடான் கார்கள் விற்பனையானது. ஏப்ரலில் 4,809 வெர்னா கார்கள் விற்பனையான நிலையில், கடந்த மாதம் சிறிது மாத்திரம் விற்பனையில் பின்தங்கி 13வது இடத்தில் இருக்கிறது.

மாருதி எர்டிகா

மாருதி எர்டிகா

கடந்த மாதம் எர்டிகாவின் விற்பனையும் குறைந்திருக்கிறது. ஏப்ரலில் 5,168 எர்டிகா கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த மாதம் 4,306 எர்டிகா கார்கள் மட்டுமே விற்பனையானதுடன், 14 வது இடத்தில் இருக்கிறது.

ஹூண்டா சான்ட்ரோ

ஹூண்டா சான்ட்ரோ

பல புதிய மாடல்கள் வந்தாலும் சளைக்காமல் போட்டி கொடுத்து வருகிறது சான்ட்ரோ. இதனால், தொடர்ந்து டாப்-20 லிஸ்ட்டில் இடம் பெற்று வருகிறது. கடந்த மாதம் 4,274 சான்ட்ரோ கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது.

டொயோட்டா இன்னோவா

டொயோட்டா இன்னோவா

கடந்த மாதமும் இன்னோவாவின் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. ஆனால், ஏப்ரலை(3,192) ஒப்பிடும்போது விற்பனை சற்று உயர்ந்திருக்கிறது. கடந்த மாதம் 4,216 இன்னோவா கார்களை டொயோட்டா விற்பனை செய்தது. இதனால், 20வது இடத்தில் இருந்த இன்னோவா தற்போது17வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.

 மாருதி ஓம்னி

மாருதி ஓம்னி

கடந்த மாதம் 4,210 ஓம்னி வேன்களை மாருதி விற்பனை செய்துள்ளது.

ஃபோர்டு ஃபிகோ

ஃபோர்டு ஃபிகோ

ஏப்ரலில் 3,822 ஃபிகோ கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த மாதம் 3,469 ஃபிகோ கார்கள் விற்பனையாகின. அதேவேளை, ஏப்ரலில் 19வது இடத்தில் இருந்த ஃபிகோ தற்போது 18வது இடத்தை பிடித்தது.

ஹோண்டா சிட்டி

ஹோண்டா சிட்டி

டாப்-20 லிஸ்ட்டுக்குள் மீண்டும் வந்துள்ளது ஹோண்டா சிட்டி. கடந்த மாதம் 3,202 சிட்டி கார்கள் விற்பனையாகியது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500

மஹிந்திரா எக்ஸ்யூவி500

டாப்-20 லிஸ்ட்டில் இடம்பிடித்த மஹிந்திராவின் மூன்றாவது கார் மாடல் எக்ஸ்யூவி500. கடந்த மாதம் 2,144 எக்ஸ்யூவி500 கார்களை மஹிந்திரா விற்பனை செய்தது. இருப்பினும், எக்ஸ்யூவி500வின் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை என மஹிந்திரா அதிருப்தியில் இருக்கிறது.

Most Read Articles
English summary
Here is the top 20 list of cars sold in India during the month of May 2013. For the first time, the market leader - Alto leaves the number one position.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X