ஆட்டத்துக்கு தயாரான டொயோட்டா லிவா கிராஸ்!!

By Saravana

பிரேசிலில் கிராஸ்ஓவர் ரகத்துக்கு மாற்றப்பட்ட டொயோட்டா லிவா கிராஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் சோதனைகள் செய்யப்பட்டு வந்த இந்த கார் தற்போது உற்பத்தி நிலை மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ, ஸ்காடா ஃபேபியா ஸ்கவுடன் கார்களை போன்று வந்திருக்கும் இந்த கார் மிக கம்பீரமாகவும், கவர்ச்சியாகவும் இருக்கிறது. அசத்தலான இந்த காரின் படங்கள், கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

 மாற்றங்கள்

மாற்றங்கள்

முகப்பு கிரில், பம்பர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பெரிய வீல் ஆர்ச் இதற்கு எஸ்யூவி தோற்றத்தை வலிய வந்து கொடுக்கிறது. ரூஃப் ரெயில்கள், ஸ்பாய்லர் ஒட்டுமொத்தத்த தோற்றத்தில் மினி எஸ்யூவியாக மாறியிருக்கிறது. புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள் பொருத்தப்பட்டிருப்பதால், சாதாரண மாடலிலிருந்து எளிதாக வேறுபடுகிறது.

பொருட்கள் வைக்கும் வசதி

பொருட்கள் வைக்கும் வசதி

இதன் கூரை மீது பொருத்தப்பட்டிருக்கும் ரூஃப் பார்களில் 50 கிலோ வரை எடையை வைத்து எடுத்துச் செல்ல முடியும்.

உட்புறம்

உட்புறம்

உட்புறத்தில் புதிய ஃபேப்ரிக் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை.

எஞ்சின்

எஞ்சின்

இந்தியாவில் டிஆர்டி ஸ்போர்ட்டிவோ லிவா காரில் பயன்படுத்தப்பட்ட அதே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், 96 எச்பி ஆற்றலை வழங்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

விலை

விலை

வரும் 18ந் தேதி முதல் விற்பனைக்கு செல்லும் இந்த லிவா கிராஸ்ஓவர் கார் 20,100 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.12.5 லட்சம்)விலையில் விற்பனைக்கு செல்கிறது.

Most Read Articles
Story first published: Friday, November 8, 2013, 13:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X