அசத்தும் புதிய டொயோட்டா கரொல்லா... விரைவில் இந்திய தரிசனம்!

மிக அசத்தலாக வடிவமைக்கப்பட்ட புதிய டொயோட்டா கரொல்லா டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு பிற்பகுதியில் இந்த புதிய கரொல்லா இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

11ம் தலைமுறையாக வர இருக்கும் புதிய கரொல்லா ஆசிய மார்க்கெட்டில் முதலாவதாக தைவானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிப்ரவரியில் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய கரொல்லா இந்திய வாடிக்கையாளர்களுக்கு தரிசனம் தர உள்ளது.

ஐரோப்பிய டிசைன்

ஐரோப்பிய டிசைன்

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா என இரு வேறு டிசைன்களில் புதிய கரொல்லா வெளிவந்துள்ளது. இதில், ஐரோப்பிய டிசைன் கொண்ட மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வரும்.

எஞ்சின்

எஞ்சின்

புதிய கரொல்லாவில் 88.4 பிஎஸ் பவரை அளிக்கும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 140 பிஎஸ் பவர் கொண்ட 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இந்தியாவில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. 6 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல்களில் கிடைக்கும்.

மாற்றங்கள்

மாற்றங்கள்

எல்இடி ஹெட்லைட், 15 இஞ்ச் அலாய் வீல்களுடன் வர இருக்கிறது. தற்போதைய கரொல்லா ஆல்டிஸ் காரைவிட பன்மடங்கு தோற்றத்தில் பொலிவு பெற்றிருக்கிறது புதிய கரொல்லா.

 எரிபொருள் சிக்கனம்

எரிபொருள் சிக்கனம்

புதிய கரொல்லாவின் எஞ்சின் அதிக எரிபொருள் சிக்கனம் தரும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளதாக டொயோட்டா தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஆட்டோமேட்டிக் மாடல் அதிக எரிபொருள் சிக்கனம் தரும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

விற்பனை?

விற்பனை?

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டாலும், அடுத்த ஆண்டு பண்டிகை காலத்தின்போது இந்த புதிய கரொல்லாவை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டொயோட்டா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
According to the reports, the Japanese carmaker Toyota will showcase the 2014 Corolla sedan at 2014 Auto Expo in Noida next February. This will only be an initial unveiling as the Bidadi plant will only start the production of the 2014 Toyota Corolla quite some time later.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X