காருக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் - ஸ்பெஷல் ரிப்போர்ட்

காருக்கான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் குறித்து ஏற்கனவே நாம் கார் ஏபிசிடி என்ற பெயரில் தொடர் ஒன்றை வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், வாசகர்கள் அடிக்ககடி எழுதும் கருத்துக்கள் மற்றும் தொடர்புகளின் அடிப்படையிலும், அவர்களுக்கு பயன்படும் வகையிலும் காருக்கான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் பற்றிய அந்த கட்டுரையை மீண்டும் தருகிறோம்.

தற்போது உள்ள சூழலில் காருக்கு பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மிக அவசியமான ஒன்றாகியுள்ளது. ஒருவேளை விபத்து ஏற்பட்டால் ஆபத்பாந்தவானாக காப்பாற்றும். அதில், காருக்கான தேவையான சில முக்கியமான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் குறித்த விபரம் இதோ மீண்டும் உங்களுக்காக...

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம்

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம்

அனைத்து கார்களிலும் கட்டாயம் இருக்க வேண்டிய தொழில்நுட்பமாக கருதப்படுவதுதான் ஏ.பி.எஸ். திடீரென பிடிக்கும்போது காரின் டயர்கள் சறுக்கி சென்று விபத்தில் சிக்கிவிடும் நிலை ஏற்படுகிறது. இல்லாவிட்டால், பிரேக் ஷூக்கள் லாக் ஆகி, காரின் பேலன்சை குறைந்து நிலைதடுமாற செய்கிறது.

இந்த பிரச்சினைக்கு அருமருந்தாக வந்துள்ள புதிய தொழில்நுட்பம்தான் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம். காரை திடீரென பிரேக் பிடித்து நிறுத்தினாலும், சக்கரங்களுக்கு சீரான பிரேக்கிங் திறனை அனுப்பி சக்கரங்கள் சறுக்காதவாறு காரை நிறுத்துவதுதான் ஏ.பி.எஸ்., தொழில்நுட்பம்.

சாதாரண கார்களில் திடீரென பிரேக் பிடித்து நிறுத்துவதைவிட, ஏ.பி.எஸ்., தொழில்நுட்பம் காரை சில மீட்டர் முன்னதாகவே காரை நிறுத்திவிடும் என்பதும் இதன் விஷேசம். மழைக்காலங்களில் ஈரப்பதமான சாலைகளில் செல்லும்போதும், பிரேக் பிடித்தால் காரின் சக்கரங்கள் சறுக்காதவாறு ஏ.பி.எஸ்., பார்ததுக் கொள்ளும்.

இபிடி

இபிடி

வேகமாக செல்லும்போது பிரேக்கை திடீரென அழுத்தினாலும் காரை நிறுத்துவதற்கு முன்பக்கம் மற்றும் பின்பக்க சக்கரங்களுக்கு சீரான பிரேக்கிங் திறனை அனுப்புவதே எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்டிரிபியூசன் சிஸ்டத்தின் வேலை. மேலும், காரின் எடைக்கு தக்கவாறு பிரேக்கிங் சிஸ்டத்தை தானாகவே மாற்றும் வசதியும் கொண்டது.

எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம்(இ.எஸ்.பி.,)

எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம்(இ.எஸ்.பி.,)

கட்டுப்பாட்டை மீறி கார் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டால், தானியங்கி பிரேக்கை பிடித்து காரை சீராக நிறுத்தும் நவீன தொழில்நுட்பமே எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் சிஸ்டம். கார் ஓட்டும்போது டிரைவர் கண் அயர்ந்து, கைகளிலிருந்து ஸ்டீயரிங் வீல் கட்டுப்பாட்டை இழந்தாலும், அலுங்கல் குலுங்கல் இல்லாமல் இ.எஸ்.பி., தொழில்நுட்பம் தாமாகவே காரை நிறுத்திவிடும்.

டிபிஎம்எஸ்

டிபிஎம்எஸ்

டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மூலம் டயர்களில் காற்றின் அழுத்தத்தை தெரிந்துகொள்ளலாம். டயர்களில் காற்றின் அழுத்தம் சீராக இருப்பது பாதுகாப்பானது மட்டுமின்றி, மைலேஜுக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது. டயருக்குள் பொருத்தப்பட்டிருக்கும் சிறிய கருவி காரின் கம்ப்யூட்டருக்கு ரேடியோ சிக்னல் மூலம் டயரில் காற்றின் அழுத்தத்தை தெரிவிக்கும்.

காற்றுப் பைகள்

காற்றுப் பைகள்

கார் விபத்துக்குள்ளானால், காரில் இருப்பவர்களை பாதுகாக்கும், உயிர்காக்கும் காற்றுப்பைகளே கர்ட்டெயின் ஏர்பேக்ஸ் என்று கூறப்படுகிறது. காரின் டேஷ்போர்டு, பின் இருக்கை மற்றும் கதவுகளில் ஏர்பேக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். தற்போது என்ட்ரி லெவல் கார்களே காற்றுப் பைகளுடன் கிடைக்கிறது.

ஒருவேளை, கார் விபத்தில் சிக்க நேர்ந்தால் நொடிப்பொழுதிற்குள் காற்றுப் பைகள் விரிந்து காருக்குள் இருப்பவர்களை பாதுகாக்கும். தலையில் காயம் ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில் காற்றுப் பைகள் பொருத்தப்படுகின்றன.

சீட் பெல்ட்

சீட் பெல்ட்

பலர் சீட் பெல்ட்டை போடுவதை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. சீனாவில் கூட சீட் பெல்ட் போடுவதை தவிர்க்க பலர் சீட் பெல்ட் போட்ட டீ ஷர்ட்டுகளை போட்டுக் கொள்வதாக படித்தோம். ஆனால், சீட் பெல்ட்டும் ஒரு உயிர்காக்கும் கருவிதான். பலர் சீட் பெல்ட் அணியாமல் சென்றதால் உயிரிழந்ததாக நாம் ஏற்கனவே பலமுறை எழுதியிருக்கிறோம்.

எனவே, கட்டாயம் சீட் பெல்ட் அணிந்து செல்வதே சாலச் சிறந்தது. விபத்துக்களின்போது அதிக காயமடைவதை தவிர்க்கலாம்.

 ரிவர்ஸ் சென்சார்

ரிவர்ஸ் சென்சார்

காருக்கு முன்னும், பின்னும் பம்பரில் பார்க்கிங் சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும். பெரும்பாலும் பின்பக்க பம்பரில்தான் பொருத்துகின்றனர். காரை பின்னால் எடுக்கும்போது காரின் மீது இடிக்கும் வகையில் ஏதேனும் பொருட்கள் அல்லது வாகனங்கள் இருந்தால் 'பீப்' ஒலி எழுப்பி டிரைவரை எச்சரிக்கும்.

ரிவர்ஸ் எடுக்கும்போது கண்ணுக்கு மறைவாக இருக்கும் பொருட்களை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். பார்க்கிங் சென்சார்களை எளிதாக பொருத்திவிடலாம். தற்போது நீங்கள் எத்தனை சென்சார்கள் பொருத்த விரும்புகிறீர்கள் என்பதை பொறுத்து ரூ.3,000 முதல் ரூ.5000 வரையிலான விலையில் பார்க்கிங் சென்சார்கள் கிடைக்கின்றன.

ரியர் வியூ கேமரா

ரியர் வியூ கேமரா

காரின் பின்புறத்தில் மட்டும் ரிவர்ஸ் கேமரா பொருத்தப்படுகிறது. காருக்குள் டிரைவருக்கு முன்னால் இருக்கும் வீடியோவை காட்டும் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கும். இந்த திரை ரிவர்ஸ் கேமராவுடன் இணைக்கப்பட்டிருக்கும். காரை பின்னால் எடுக்கும்போது நீங்கள் திரும்பி பார்க்க வேண்டாம். திரையை பார்த்துக்கொண்டே காரை பின்னால் எடுக்க முடியும்.

காருக்கு பின்னால் இருக்கும் பகுதியை முழுவதுமாக காட்டும். ரூ.10,000 முதல் பிராண்டட் ரிவர்ஸ் கேமரா மார்க்கெட்டில் கிடைக்கின்றன. பார்க்கிங் சென்சார் மற்றும் ரிவர்ஸ் கேமரா இரண்டும் அடங்கிய கிட்டும் தற்போது கிடைக்கின்றன. இவை மொத்தமாக ரூ.15,000 விலையில் வாங்கலாம்.

குரூஸ் கன்ட்ரோல்

குரூஸ் கன்ட்ரோல்

நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்போது, பயன்படும் அதிநவீன தொழில்நுட்பம் இது. நெடுஞ்சாலைகளில் ஒரே சீரான வேகத்தில் கார் செல்வதற்கு குரூஸ் கன்ட்ரோல் உதவுகிறது. உதாரணமாக 80 கி.மீ., வேகத்தில் செல்ல வேண்டும் என்றால், குரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தில் 80 கி.மீ., வேகத்தை செட் செய்து விட்டால் போதும்.

ஆக்சிலேட்டரை மிதிக்காமலேயே கார் தானாக 80 கி.மீ., வேகத்தில் செல்லும். காரின் வேகத்தை குறைப்பதற்கு ஆக்சிலேட்டர் அல்லது பிரேக்கில் காலை வைத்து லேசாக அழுத்தினால் போதும், குரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் தானாக நின்றுவிடும். தவிர, இதன் அட்வான்ஸ்டு தொழில்நுட்பம்தான் ஆட்டோமேட்டிக் குரூஸ் கன்ட்ரோல். இது காருக்கு முன்னால் மற்றும் பின்னால் வரும் வாகனங்களுக்கு ஏற்ப, காரின் வேகத்தை குறைத்துவிடும். முன்னால் செல்லும் வாகனத்துடன் மோதும் நிலை ஏற்பட்டால் கூட, தானியங்கி பிரேக்கை அழுத்தி காரை நிறுத்திவிடும்.

ஹில் அசிஸ்ட்

ஹில் அசிஸ்ட்

சரிவான சாலையில் நிறுத்தி விட்டு மீண்டும் எடுக்கும்போது டிரைவர் பிரேக்கிலிருந்து காரை எடுத்தாலும், காரை பின்னோக்கி செல்லாமல் 2.5 வினாடிகளுக்கு காரின் பிரேக்கை ஹில் அசிஸ்ட் பிடித்து வைத்திருக்கும். பின்னர் கிளட்ச், ஆக்சிலேட்டருக்கு கால் சென்று அழுத்தும்போது பிரேக்கை தானாக ரீலிஸ் செய்துவிடும் இந்த ஹில் அசிஸ்ட். இந்த தொழில்நுட்பம் 2 சென்சார்கள் உதவியுடன் செயல்படுகிறது.

Most Read Articles
English summary
Knowing key vehicle safety features and making sure these features are a part of the vehicle we purchase. Let us us go through a small list of key safety features that we think are essential for Indian conditions. Some of them are not common in Indian car models, but we have mentioned them since we feel they would be useful once they become more common.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X