கதவு இல்லாத காருக்கு காப்புரிமை வாங்கிய ஃபோக்ஸ்வேகன்!

கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பரில் நடந்த ஃபிராங்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் பக்கி(Buggy) என்ற கான்செப்ட் காரை ஃபோக்ஸ்வேகன் பார்வைக்கு வைத்திருந்தது. கூரை மற்றும் கதவு இல்லாமல் வித்தியாசமாக டிசைன் செய்யப்பட்டிருந்த இந்த கான்செப்ட் கார் அனைவரின் பார்வையையும் கவர்ந்தது. ஆனால், அதன்பிறகு இந்த கார் குறித்த தகவல் எதையும் ஃபோக்ஸ்வேகன் வெளியிடவில்லை.

இந்த நிலையில், அமெரிக்காவில் பக்கி காரின் டிசைனுக்கு காப்புரிமை வேண்டி ஃபோக்ஸ்வேகன் விண்ணப்பித்திருந்தது. இதற்கு தற்போது காப்புரிமை கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காப்புரிமை கிடைக்கப்பெற்ற இந்த வித்தியாசமான டிசைன் கொண்ட காரின் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 அப் பிளாட்பார்ம்

அப் பிளாட்பார்ம்

ஃபோக்ஸ்வேகனின் அப் ஹேட்ச்பேக் கார் பிளாட்பார்மில் இந்த புதிய கான்செப்ட் கார் வடிவமைக்கப்பட்டது.

அப் டிசைன்

அப் டிசைன்

தற்போது அப் கார் 2 டோர், 4 டோர் மற்றும் கூபே மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இந்த புதிய கான்செப்ட் கார் உற்பத்தி நிலையை எட்டினால் அது கதவு இல்லாத, கூரை இல்லாத அப் காரின் புதிய மாடலாக கூறலாம்.

பீட்டிலுக்கு நன்றி

பீட்டிலுக்கு நன்றி

இது அப் காரின் பிளாட்பார்மில் வடிவமைப்பு செய்யப்படாலும், சில டிசைன் தாத்பரியங்கள் 1960ம் ஆண்டு பீட்டில் மாடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

 2 சீட்டர்

2 சீட்டர்

பக்கி கான்செப்ட் கார் 2 பேர் அமர்ந்து செல்லும் வசதி கொண்டது.

 பாதுகாப்பு

பாதுகாப்பு

ரோல் பாருடன் இந்த கார் பாதுகாப்பு கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அலாய் வீல்

அலாய் வீல்

2011 பிராங்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் இந்த கார் 18 இஞ்ச் அலாய் வீல்களுடன் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

பொருட்களுக்கான இடவசதி

பொருட்களுக்கான இடவசதி

3,584 மிமீ நீளம் கொண்ட பக்கி காரில் பின்புறம் பிக்னிக் அல்லது பயணங்கள் செல்லும்போது பொருட்களை எடுத்து செல்லும் வகையில் இடவசதி உள்ளது.

பீச் கார்

பீச் கார்

பீச் கார் ரகத்தை சேர்ந்த இந்த காரின் தரை பகுதியில் தண்ணீர் வெளியேறுவதற்கான துளைகளை கொண்டிருக்கிறது.

உற்பத்திக்கு செல்லுமா?

உற்பத்திக்கு செல்லுமா?

காப்புரிமை கிடைத்து விட்டாலும் கூட இந்த கார் உற்பத்தி நிலைக்கு செல்வதில் சந்தேகம் நிலவுகிறது. இதுகுறித்து ஃபோக்ஸ்வேகன் விரைவில் தக்க அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Leading automobile website is reporting that VW applied for a design patent for its Buggy in March, 2012 in the U.S. The auto giant has now reportedly been granted the design patent.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X