புதிய பவர்ஃபுல் காருடன் ஆடி, பென்ஸ், பிஎம்டபிள்யூவுக்கு வால்வோ சவால்!!

ஜெர்மனியின் பெர்ஃபார்மென்ஸ் ரக தயாரிப்புகளான ஆடி எஸ்3 ஸ்போர்ட்பேக், பிஎம்டபிள்யூ எம்125ஐ எக்ஸ்டிரைவ், மெர்சிடிஸ் பென்ஸ் ஏ45 ஏஎம்ஜி ஆகிய கார்களுக்கு போட்டியாக புதிய கான்செப்ட் காரை வால்வோ வடிவமைத்துள்ளது. வி40 கிராஸ் கன்ட்ரி டி5 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த காரை வால்வோவின் பெர்ஃபார்மென்ஸ் டிசைன் பார்ட்னரான ஹெய்கோ ஸ்போர்டிவ் நிறுவனம் இணைந்து வடிவவமைத்துள்ளது.

இத்தோடு, தனது தயாரிப்பு பற்றி பெருமிதம் தெரிவித்துள்ள வால்வோ, மேற்குறிப்பிட்ட ஜெர்மனி தயாரிப்புகளுக்கு சவால் விட்டுள்ளது. 350 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் சக்தி கொண்ட இந்த கார் ரேஸ் காரில் பயன்படுத்தும் தொழில்நுட்ப சமாச்சாரங்கள் மற்றும் கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், இதனை சாலையிலும் ஓட்ட முடியும் என்பதால், தேவைப்படும் சமயத்தில் உடனடியாக இந்த காரை விற்பனைக்கு கொண்டு வரும் திட்டமும் வால்வோவிடம் இருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 5 சிலிண்டர் கொண்ட 2.5 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இதுதவிர, எக்ஸாஸ்ட் சிஸ்டம், இன்டர் கூலர், ஏர் இன்டேக் ஆகியவற்றிலும் தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

பவர்

பவர்

சாதாரணமாக 251 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் இந்த எஞ்சினை 316 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் விதத்தில் டர்போசார்ஜர்களை இணைத்துள்ளது ஹெய்கோ.

பவர் அவுட்புட்

பவர் அவுட்புட்

"வாட்டர்-எத்தனால் இன்ஜெக்ஷன் சிஸ்டம்" மூலம் காரின் அதிகபட்ச பவரை வெளிப்படுத்த செய்ய முடியும். இதற்காக, டிரைவருக்கு அருகில் பட்டன் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

கூடுதல் பவர்

கூடுதல் பவர்

டர்போசார்ஜர்கள் உதவியுடன் அதிகபட்சமாக 316 எச்பி பவரை வெளிப்படுத்தும் எஞ்சின் தற்போது வாட்டர்-எத்தனால் இன்ஜெக்ஷன் சிஸ்டம் மூலம் அதிகபட்சமாக 350 எச்பி பவரையும், 510 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

எஞ்சினிலிருந்து பவர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வழியாக அனைத்து சக்கரங்களுக்கும் கடத்தப்படுகிறது.

உந்துசக்தி

உந்துசக்தி

0-100 கிமீ வேகத்தை வெறும் 5.6 வினாடிகளில் இந்த கார் தொட்டுவிடும். மணிக்கு அதிகபட்சமாக 265 கிமீ வேகம் வரை செல்லும் அம்சங்களை கொண்டுள்ளது.

ரேஸ் கார்தான்

ரேஸ் கார்தான்

ஓர் முழுமையான ரேஸ் காருக்குண்டான அனைத்து அம்சங்களும் இந்த காரில் உள்ளன. ரெகாரோ ரேஸிங் லெதர் இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

பவர்ஃபுல் பிரேக்

பவர்ஃபுல் பிரேக்

சக்திவாய்ந்த 6 பிஸ்டன்கள் கொண்ட டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. 19 இஞ்ச் அலாய் வீல், கான்டிஃபோர்ஸ் டயர்கள், ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன் ஆகியவற்றுடன் ஜமாய்க்கிறது இந்த கார்.

Most Read Articles
English summary
Volvo has openly challenged three German performance cars, Audi S3 Sportback, BMW M125i xDrive and Mercedes A45 AMG with a special concept car built around the V40 Cross Country T5. The special car, created by Volvo's performance partner Heico Sportiv is capable of churning out 350 HP, along with full fledged racing hardware underneath the shell.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X