தரமும், தொழில்நுட்பமும் இழைந்தோடும் யமஹாவின் புதிய எலக்ட்ரிக் கார்

By Saravana

பஜாஜ் ஆட்டோவைப் போன்றே இருசக்கர வாகன தயாரிப்பில் புகழ்பெற்ற யமஹா நிறுவனம் புதிய குட்டிக் காரை வடிவமைத்துள்ளது. பேட்டரியில் இயங்கும் இந்த புதிய குட்டிக் காரை டோக்கியோ மோட்டார் ஷோவில் யமஹா அறிமுகம் செய்துள்ளது.

நவீன தொழில்நுட்பமும், மிகுந்த தரத்திலும் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த எலக்ட்ரிக் கார் நகர்ப்புற போக்குவரத்து தேவையை எளிதாக நிறைவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யமஹா மோட்டிவ். இ என்ற பெயரிலான இந்த எலக்ட்ரிக் காரின் படங்கள், கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன்

டிசைன்

இங்கிலாந்தை சேர்ந்த கார்டன் முர்ரே டிசைன் நிறுவனத்துடன் இணைந்து இந்த காரை யமஹா உருவாக்கியுள்ளது. கார்டன் முர்ரே ஐஸ்ட்ரீம் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐஸ்ட்ரீம் தயாரிப்பு நுட்பம்

ஐஸ்ட்ரீம் தயாரிப்பு நுட்பம்

இலகு எடை, பாதுகாப்பு, குறைவான சுற்றுச்சூழல் பாதிப்பு என்ற புதிய ஃபார்முலா - 1 கார்களுக்கான தயாரிப்பு நுட்பத்தை உள்ளடக்கியதே கார்டன் முர்ரேயின் ஐ ஸ்ட்ரீம் தயாரிப்பு நுட்பம். இதன் அடிப்படையில் இந்த புதிய கார் உருவாக்கப்பட்டுள்ளது.

 பேட்டரி

பேட்டரி

ஒரு முறை சார்ஜ் செய்தால் நடைமுறையில் 160 கிமீ தூரம் பயணிக்க முடியும் என்கிறது யமஹா.

 பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் எலக்ட்ரிக் மோட்டார் 0- 100 கிமீ வேகத்தை 15 வினாடிகளில் கடந்துவிடுமாம். அதிகபட்சமாக மணிக்கு 105 கிமீ வேகத்தில் செல்லத்தக்கதாக இருக்கும்.

 இருக்கை வசதி

இருக்கை வசதி

இந்த கார் ரேவா ஐ போன்றே இரண்டு பேர் பயணிக்கும் வசதி கொண்டதாக இருக்கும்.

சார்ஜ்

சார்ஜ்

ஒருமுறை முழு சார்ஜ் செய்வதற்கு 3 மணி நேரம் ஆகும் என்றும், குயிக் சார்ஜ் ஆப்ஷன் மூலம் ஒரு மணி நேரத்தில் சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #yamaha #four wheeler #யமஹா
English summary
Yamaha Motor Company has always been dedicated to craftsmanship with a focus on 'quality mobility'. The MOTIV.e builds on this philosophy and incorporates Formula One heritage, inspiration from motorcycle design and the latest technology to deliver an exciting and high quality driving experience. The MOTIV.e delivers a new level of personal mobility.
Story first published: Thursday, November 21, 2013, 13:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X