1000 கிமீ ரேஞ்ச், 5 நிமிடத்தில் பேட்டரி சார்ஜ்... இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்!

By Saravana

குஜராத்தை சேர்ந்த கோல்டன் ஆரோ வயர்லெஸ் என்ற நிறுவனம் இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரை வடிவமைத்துள்ளது.

சூப்பர்நோவா எலக்ட்ரிக் வெகிக்கிள் என்று அழைக்கப்படும் இந்த எலக்ட்ரிக் காரின் சிறப்பம்சங்கள் அசத்தலாக இருக்கின்றன. இந்த காரின் புரோட்டோடைப் மாடலும் வெளியிடப்பட்டுவிட்டது. அட, முன்பதிவு கூட துவங்கி சக்கைபோடு போடுகிறதாம். அப்படியெனில், இந்த காரின் சிறப்பம்சங்களை பார்த்துவிடலாம் வாருங்கள்.


அட்ராசக்கை...

அட்ராசக்கை...

அசத்தலான சிறப்பம்சங்கள் என்பது வெறும் வாய் வார்த்தைக்காக அல்ல. இந்த காரின் சிறப்பம்சங்களை பார்த்து இதுவரை 250 பேர் முன்பதிவு செய்துவிட்டனராம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

ரேஞ்ச்

ரேஞ்ச்

எலக்ட்ரிக் கார்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று அதிக தூரம் செல்ல முடியாதது என்பதுதான். ஆனால், இந்த காரின் பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்யும்போது 1,000கிமீ தூரம் வரை செல்ல முடியுமாம்.

பேட்டரி சார்ஜ்

பேட்டரி சார்ஜ்

மூன்றுவிதமான பேட்டரி மாடல்களில் கிடைக்கும். லீட் ஆசிட் பேட்டரி கொண்ட மாடலில் சார்ஜ் செய்வதற்கு 8 மணிநேரமும், லித்தியம் அயான் பேட்டரி கொண்ட மாடலை சார்ஜ் செய்வதற்கு 2 மணிநேரமும் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சூப்பர்கெப்பாசிட்டர்கள் கொண்ட மாடலை சார்ஜ் செய்ய வெறும் 5 நிமிடங்கள் போதுமாம்.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் ரகத்தில் குறிப்பிடப்படும் இந்த கார் மணிக்கு 150கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாக குறிப்பிடப்படுகிறது.

உற்பத்தி

உற்பத்தி

இந்த காரை வர்த்தக ரீதியில் உற்பத்தி செய்வதற்காக ரூ.500 கோடியை முதலீட்டாளர்கள் மூலமாக திரட்டியுள்ளது குளோபல் ஏரோ வயர்லெஸ் நிறுவனம். டெல்லி, மும்பை, பெங்களூர், ராய்ஸ்பூர் மற்றும் குஜராத்தில் ஆலைகளை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

அனுமதி

அனுமதி

எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்களை விற்பனை செய்வதற்கு இந்தியாவில் அனுமதிப்பதற்கான விதிமுறைகள் எதுவும் இல்லை என்பதால் மத்திய அரசிடம், எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கான விதிமுறைகளை வகுப்பதற்கான முயற்சிகளை அராய் மேற்கொண்டுள்ளது. இதனால், இந்த காரை உடனடியாக விற்பனைக்கு கொண்டு வருவதற்கான தடைக்கல்லாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Most Read Articles
English summary

 Gujarat will soon become home to a company called Golden Arrow Wireless which has already showcased its prototype, an Electric Sports Car called the SuperNova Electric Vehicle (SNEV). The company is looking for 50 acres of land to start building India's first ever sports car, with zero emissions.
Story first published: Wednesday, December 3, 2014, 9:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X