புதிய புகாட்டி சிரோன்... பேரை கேட்டாலே சும்மா அதிருதில்லை...!!

Written By:

உலகின் அதிவேக கார் என்றவுடன் சட்டென மனதில் விரியும் புகாட்டி வெய்ரான் காருக்கு மாற்றாக புதிய மாடலை புகாட்டி நிறுவனம் தயாரித்து வருகிறது.

புகாட்டி சிரோன்(Chiron) என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய மாடல் வெய்ரான் காரைவிட அதிக பவர்ஃபுல்லான மாடலாக களமிறக்குவதற்கு புகாட்டி திட்டமிட்டிருக்கிறது. இது ஒரு ஸ்பீட்ஸ்டெர் ரக மாடலாகவும் இருக்கும். லிமிடேட் எடிசனாக மொத்தம் 450 கார்கள் மட்டுமே தயாரித்து விற்பனை செய்யப்படும்.

Bugatti Veyron
 

வெய்ரான் பாடி ஸ்டைலிலான பாகங்களை பொருத்தி இந்த புதிய சிரோன் காரை சோதனை செய்து வருகின்றனர். எனவே, அதிகாரப்பூர்வமாக வெளியிடும்போது இதன் டிசைனில் மாற்றங்கள் இருக்கலாம் என்றும் தெரிகிறது.

மணிக்கு 500 கிமீ வேகத்தை டாப் ஸ்பீடாக கொண்ட மாடலாக இதனை அறிமுகம் செய்ய புகாட்டி இலக்கு வைத்துள்ளது. அதேநேரத்தில், அதிகபட்சமாக மணிக்கு 463.4 கிமீ வேகம் வரை எட்டும் வல்லமை கொண்டதாக இருக்கும் என்றும், அதற்கு தக்கவாறு இதன் எஞ்சினை மேம்படுத்தி வருகிறது புகாட்டி.

புகாட்டி வெய்ரான் 1,200 பிஎச்பி பவரை அளிக்கும் அதே எஞ்சின்தான் இந்த காரிலும் என்றாலும், அதனை 1,500 பிஎச்பி பவரை அளிக்கும் விதத்தில் புகாட்டி மேம்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்மூலம், உலகின் அதிவேக கார் பட்டத்துக்கு வேறு நிறுவனங்கள் எளிதாக நெருங்கிவிடாத வகையில், புதிய சாதனை படைக்கும் திட்டத்துடன் சிரோன் காரை தயாரிக்கும் பணிகளில் படு தீவிரமாக புகாட்டி எஞ்சினியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் சிக்கன கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு இந்த கார் தயாரிக்கப்பட்டு வருவதால், புகாட்டி எஞ்சினியர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அடுத்த சாதனைக்கான மாடலை தயாரித்து வருகின்றனர்.

குறிப்பு: மாதிரிக்காக புகாட்டி வெய்ரான் எட்டோர் எடிசன் கார் படம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

English summary
Bugatti is working “very intensively” on a successor to the Veyron, rumored to be called the Chiron. 
Story first published: Saturday, December 13, 2014, 15:52 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark