சீனாவில் புதிய செவர்லே க்ரூஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

By Saravana

புதிய செவர்லே க்ரூஸ் செடான் கார் சீனாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

வெளிப்புறத் தோற்றம் மற்றும் உட்புற வடிவமைப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட இந்த புதிய மாடல் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


 முகப்பு

முகப்பு

முகப்பு கூடுதல் வசீகரம் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது. கூர்மையான தோற்றத்துடன் மாற்றியமைக்கப்பட்ட ஹெட்லைட் டிசைன், புதிய கிரில் டிசைன், எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள் புதிய க்ரூஸ் காருக்கு அதிக வசீகரத்தை கொடுக்கிறது.

எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்கள்

148 பிஎச்பி பவரை அளிக்கும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 112 பிஎச்பி பவரை அளிக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்டதாக கிடைக்கும். டீசல் மாடலில் 2.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். டீசல் மாடல் பற்றிய முழு விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இன்டிரியர்

இன்டிரியர்

பழுப்பு மற்றும் கருப்பு நிறத்திலான டியூவல் டோன் இன்டிரியர் கொடுக்கப்பட்டுள்ளது. ஏசி வென்ட்டுகளின் டிசைனிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. லெதர் கவருடன் கூடிய புதிய டிசைனிலான 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் உள்ளது. கியர் நாப் மற்றும் சென்ட்ரல் கன்சோல் டிசைனிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் விலை விபரம்

சீனாவில் விலை விபரம்

புதிய செவர்லே க்ரூஸ் காரின் பேஸ் மாடல் இந்திய மதிப்பில் ரூ.10.80 லட்சம் விலையிலும், டாப் வேரியண்ட் ரூ.16.73 லட்சம் விலையிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

 இந்தியாவுக்கு எப்போது?

இந்தியாவுக்கு எப்போது?

அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய செவர்லே க்ரூஸ் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
The Cruze has been around for a while and Chevrolet had showcased a refreshed model at 2014 Beijing Motor Show. The new model is supposed to be launched in global markets. The American based automobile giant has introduced its 2015 Cruze for the Chinese market.
Story first published: Tuesday, September 2, 2014, 12:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X