புதிய ஜாகுவார் எக்ஸ்இ கார் அறிமுகம்: நடுக்கத்தில் ஜெர்மன் 'மும்மூர்த்திகள்'!

By Saravana

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் புதிய ஜாகுவார் எக்ஸ்இ கார் லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. ஓட்டுனர்களுக்கான உண்மையான கார் என்ற பிரச்சாரத்துடன் இந்த புதிய சொகுசு செடான் காரை ஜாகுவார் அறிமுகம் செய்துள்ளது.

ஜெர்மன் தயாரிப்புகளான பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், பென்ஸ் சி கிளாஸ் மற்றும் ஆடி ஏ4 செடான் கார்களுக்கு இது நேரடியாக வர இருப்பதால், இந்த செக்மென்ட்டில் போட்டி அதிகரிக்கிறது. மேலும், ஜாகுவார் நிறுவனத்தின் எதிர்கால வர்த்தகத்தை தாங்கிப் பிடிக்கும் மாடலாகவும் இது விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


முறைப்படி அறிமுகம்

முறைப்படி அறிமுகம்

அக்டோபர் 2ந் தேதி பாரிஸ் மோட்டார் ஷோவில் இந்த புதிய கார் மாடல் முறைப்படி அறிமுகம் செய்யப்பட உள்ளது. அன்றைய தினமே விலை உள்ளிட்ட முழுமையான விபரங்கள் வெளியிடப்படும். அடுத்த ஆண்டு மே மாதம் முதல் டெலிவிரி துவங்கப்பட உள்ளது.

டாப் வேரியண்ட் மாடல் விபரம்

டாப் வேரியண்ட் மாடல் விபரம்

ஜாகுவார் எக்ஸ்இ காரின் டாப் வேரியண்ட் மாடலாக ஜாகுவார் எக்ஸ்இ எஸ் என்ற மாடல் நிலைநிறுத்தப்படுகிறது. இந்த டாப் வேரியண்ட்டின் முக்கிய அம்சங்கள் விபரங்களை ஜாகுவார் வெளியிட்டிருக்கிறது. இந்த டாப் வேரியண்ட்டின் பெர்ஃபார்மென்ஸ் உள்ளிட்ட பல கூடுதல் தகவல்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

ஜாகுவார் எக்ஸ்இ எஸ் எஞ்சின்

ஜாகுவார் எக்ஸ்இ எஸ் எஞ்சின்

ஜாகுவார் எக்ஸ்இ எஸ் மாடலில் 3.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு வி6 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 340 பிஎஸ் பவரையும், 450 என்எம் டார்க்கையும் அளிக்கும். பேடில் ஷிப்ட்டுகள் கொண்ட 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும்.

 செயல்திறன்

செயல்திறன்

இந்த புதிய ஜாகுவார் கார் 0-97 கிமீ வேகத்தை 4.9 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 249.5 கிமீ வேகம் வரை செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய பிளாட்ஃபார்ம்

புதிய பிளாட்ஃபார்ம்

ஜாகுவார் நிறுவனத்தின் புதிய அலுமினிய மோனோகாக் சேஸீ கட்டமைப்பில் இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், சிறப்பான கையாளுமை கொண்டதாக இருக்கும்.

இதர எஞ்சின் ஆப்ஷன்கள்

இதர எஞ்சின் ஆப்ஷன்கள்

3.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு எஞ்சினை தவிர்த்து 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட மாடல்களிலும் ஜாகுவார் எக்ஸ்இ வர இருக்கிறது. இந்த மாடல்களில் 6 ஸ்பீடு மற்றும் 8 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டதாக இருக்கும்.

சாதகங்கள்

சாதகங்கள்

அதிக எரிபொருள் சிக்கனம் தருவதாக இருக்கும். முக்கிய உதிரிபாகங்கள் எளிதில் தயாரிக்கும் வண்ணம் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. இதனால், பராமரிப்பு மற்றும் பழுதுநீக்கும் செலவுகள் மிக மிக குறைவாக இருக்கும் என ஜாகுவார் தெரிவித்துள்ளது.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

இந்த புதிய கார் 27,000 பவுண்ட் (இந்திய மதிப்பில் ரூ.26 லட்சம்) விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜாகுவார் நிறுவனத்தின் குறைவான விலை சொகுசு செடான் கார் மாடலாக வருவதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. பிஎம்டபிள்யூ, ஆடி, பென்ஸ் ஆகிய நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
The new Jaguar XE has been unveiled at a event in London . The Jaguar will be priced from £27,000 and is set to go on sale after its public debut at next month's Paris Motor Show. The first cars will be delivered to their owners in May 2015.
Story first published: Tuesday, September 9, 2014, 11:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X