அடுத்த ஆண்டு இந்தியா வரும் ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா ஃபேஸ்லிஃப்ட்!

By Saravana

மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்ட 2015 மாடல் ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா கார் விரைவில் இந்தியா வர இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் நியூயார்க் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய மாடல் பல்வேறு நாடுகளிலும் விற்பனைக்கு செல்கிறது.

வெளிப்புறம், உட்புற வடிவமைப்பில் மாறுதல்கள் செய்யப்பட்ட இந்த மாடல் தோற்றத்தில் கூடுதல் கவர்ச்சி கொண்டதாக இருக்கிறது. மேலும், கூடுதல் எரிபொருள் சிக்கனம் தரும் வகையில், டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டு சிறப்பான ஏரோடைனமிக்ஸ் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது.

New Volkswagen Jetta

பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்கள் இருவித ட்யூனிங்கிலும் வர இருக்கிறது. பெட்ரோல் மாடலில் 1.4 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது 125 எச்பி பவரை அளிக்கும் ட்யூனிங் கொண்ட மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாக இருக்கும். அதே எஞ்சின் 150 எச்பி பவர் கொணட மாடலிலும் வருகிறது. இது 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர் பாக்ஸ் கொண்டதாக இருக்கும்.

டீசல் மாடலில் 2.0 லிட்டர் டிடிஐ எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சினும் இருவிதமான ட்யூனிங்கில் வருகிறது. 110 எச்பி பவரை அளிக்கும் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர் பாக்ஸ் கொண்டதாக இருக்கும். இரண்டாவது டீசல் மாடலில் 150 எச்பி பவரை அளிக்கும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கும். இந்த மாடல் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர் பாக்ஸ் கொண்டதாக இருக்கும்.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.18 லட்சத்திற்குள் விலை கொண்டதாக இருக்கும்.

Most Read Articles
English summary
Volkswagen India has recently updated its hatchback the Polo and will be soon launching facelifts in its entire range. The German automobile giant had revealed its facelifted Jetta for international markets and have confirmed to get it to India soon.
Story first published: Tuesday, August 12, 2014, 11:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X