கோவையில் உருவான 230 பிஎச்பி சூப்பர் நானோ கார்... ரேஸ் டிராக்கில் மட்டுமே ஓட்டலாம்!!

Posted By:

ஒரு லட்ச ரூபாய் கார் என்று உலகெங்கும் அறியப்பட்ட நானோ காரை சூப்பர் கார்களுடன் போட்டி போட வைத்துள்ளனர் கோவையை சேர்ந்த ஜேஏ மோட்டார் ஸ்போர்ட் நிறுவனத்தார்.

ஆம், நானோ காரை ரேஸ் டிராக் வெர்ஷனாக மாற்றிக் காட்டி, அசத்தியுள்ளனர் ஜேஏ மோட்டார் ஸ்போர்ட் நிறுவனத்தை சேர்ந்த எஞ்சினியர்கள். முழு பாடி கிட் கொடுக்கப்பட்டு புதிய அவதாரம் எடுத்துள்ள இந்த சூப்பர் நானோ கார் கார் பிரியர்களை திகைக்க வைக்கிறது.

Super Nano
 

எம்ஆர்எஃப் இசட்.எல்.ஓ ஸ்லிக் டயர்கள், ரோல் கேஜ், ஸ்மோக்டு ஹெட்லைட் மற்றும் டெயில் லைட்டுகள், ஸ்போர்ட் ஸ்டீயரிங் வீல், அத்துடன் பேடில் ஷிப்ட் வசதி ரெகாரோ ஸ்போர்ட்ஸ் இருக்கைகள், கார்பன் ஃபைபர் ஃபினிஷில் அசத்தும் டேஷ்போர்டு போன்றவை சூப்பர் நானோ காரில் மாற்றம் கண்டிருக்கும் அல்லது கூடுதலாக இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள்.

சாதாரண நானோ காரில் 37.5 பிஎச்பி பவரை அளிக்கும் 624சிசி எஞ்சின் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த காரில் 230 எச்பி பவரை அளிக்கும் 1.3 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. மணிக்கு 190 கிமீ வேகம் வரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த காரில் இன்னும் சில மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கிறது என்றும், அடுத்த ஆண்டு நரேன் கார்த்திகேயன் இந்த காரை ரேஸ் டிராக்கில் ஓட்டுவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்போதைக்கு இந்தியாவின் அதிவேக ஹேட்ச்பேக் கார் மாடலாக ஜேஏ மோட்டார் ஸ்போர்ட் நிறுவனத்தார் தெரிவிக்கின்றனர். ஏபி ரேஸிங் பவர் பிரேக் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால், ஸ்பாய்லர் இல்லை.

சாதாரண நானோ காரை சூப்பர் நானோ காராக மாற்றுவதற்கு ரூ.25 லட்சம் செலவானாதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரேஸ் டிராக்கில் மட்டுமே ஓட்டத் தக்க அம்சங்களை கொண்டிருக்கிறது. மும்பையில் நடந்து வரும் ஆட்டோகார் பெர்ஃபார்மென்ஸ் ஷோவில் இந்த கார் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

English summary
Coimbatore based engineers team have used a standard Tata Nano to create one of the hottest track-bred hatchbacks possible.The 230bhp Super Tata Nano is currently on display at the ongoing Autocar Performance Show 2014 in Mumbai. 

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark