ஏர்பேக்குகளில் காலாவதி தேதி குறிப்பிட ஜப்பானிய கார் நிறுவனங்கள் திட்டம்!

By Saravana

கார்களில் பொருத்தப்படும் ஏர்பேக் எனப்படும் உயிர்காக்கும் காற்றுப்பைகளில் காலாவதி தேதி குறிப்பிடுவதற்கு ஜப்பானிய கார் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

ஜப்பானை சேர்ந்த தகட்டா ஏர்பேக் தயாரிப்பு நிறுவனம் சப்ளை செய்த ஏர்பேக்குகளில் தொழில்நுட்ப பிரச்னை இருப்பது சில மாதங்களுக்கு உறுதி செய்யப்பட்டது.

Airbag

இதையடுத்து, பிரச்னையை சரி செய்து தருவதற்காக, தகட்டா நிறுவனத்திடமிருந்து ஏர்பேக் சப்ளை பெற்று வந்த ஹோண்டா, டொயோட்டா, நிசான், ஜெனரல் மோட்டார்ஸ் உள்ளிட்ட உலகின் பல முன்னணி கார் நிறுவனங்கள் பல மில்லியன் கார்களை திரும்ப அழைத்தன.

இது ஆட்டோமொபைல் உலகில் பெரும் பரபரப்பையும், சர்ச்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஏர்பேக்குகளை குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் மாற்றிவிடுவதற்கு ஏதுவாக, காலாவதி தேதி குறிப்பிடுவது குறித்து பரிசீலித்து வருவதாக ஜப்பானிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஆலோசனைகளை நடத்தி வருவதாக ஹோண்டா கார் நிறுவனமும் தெரிவித்துள்ளது. இதேபோன்று, இதர ஜப்பானிய நிறுவனங்களும் இதுதொடர்பாக ஆலோசனைகள் நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது சில கார் மாடல்களில் ஏர்பேக் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டே வருகின்றன. 15 ஆண்டுகள் வரை காலாவதி தேதி கொண்ட ஏர்பேக்குகள் கார்களில் தற்போது பொருத்தப்படுகின்றன. ஆனால், ஜப்பானிய நிறுவனங்கள் காலாவதி தேதிக்கான காலம் பற்றி தகவல் எதையும் தெரிவிக்கவில்லை.

Most Read Articles
English summary
Japanese carmakers are mulling the idea of introducing expiration dates for airbags, the head of the country's auto industrial body said today, after millions of cars around the world were recalled.
Story first published: Saturday, December 20, 2014, 11:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X