வால்வோ சிட்டி பஸ்சுக்கு நிகரான புதிய அசோக் லேலண்ட் ஜன் பஸ்: சிறப்பம்சங்கள்

By Saravana

வால்வோ பஸ்களுக்கு இணையான அம்சங்கள் கொண்ட புதிய சிட்டி பஸ் மாடலை அசோக் லேலண்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஜன் பஸ்(மக்கள் பஸ்) என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த புதிய பஸ் மாடல் முதலாவதாக மேற்கு வங்கத்தில் தடம் பதிக்க உள்ளன. தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் மொத்தம் 449 பஸ்களுக்கு மேற்கு வங்க அரசு ஆர்டர் கொடுத்துள்ளது. அதில், முதலாவதாக 30 பஸ்களை அசோக் லேலண்ட் மேற்கு வங்க அரசிடம் வழங்குகிறது.

இந்த புதிய பஸ் மாடல் பயணிகளுக்கு ஏற்ற ஏராளமான வசதிகளை பெற்றிருப்பதுடன், அதிக எரிபொருள் சிக்கனம் கொண்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி இந்த புதிய பஸ் மாடலுக்கு சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஆர்டர்கள் வந்து கொண்டிருப்பதாக அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது. இந்த பஸ்சில் இருக்கும் முக்கிய சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.


 கூடுதல் தகவல்கள்

கூடுதல் தகவல்கள்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் கூடுதல் தகவல்களை காணலாம்.

சமதளம்

சமதளம்

வால்வோ பஸ்கள் போன்று ஏற்ற இறக்கம் இல்லாமல், டிரைவர் இருக்கையிலிருந்து, கடைசி இருக்கை வரை சமதளத்தை கொண்டதாக இருக்கும் என்பது இதன் முக்கிய சிறப்பம்சமாக குறிப்பிடப்படுகிறது. மேலும், ஒரே படியில் தளத்திற்கு வந்துவிட முடியும் என்பதோடு, பயணிகள் எளிதாக ஏறி, இறங்கும் வசதி கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

வசதிகள்

வசதிகள்

ஏசி மற்றும ஏசி இல்லாத மாடல்களில் கிடைக்கும். கால்களுக்கு போதிய இடைவெளியுடன் இருக்கை அமைப்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீல் சேர் நிறுத்துவதற்கான வசதியும் இருக்கும். மேலும், இதன் உட்புற வடிவமைப்பு துப்புரவு பணியாளர்கள் எளிதாக பஸ்சை சுத்தம் செய்யும் வகையில் இருக்கும். பயன்பாட்டை பொறுத்து பொழுதுபோக்கு வசதிகளையும் செய்து தருவதாக அசோக் லேலண்ட் தெரிவிக்கிறது.

டிரைவருக்கான வசதிகள்

டிரைவருக்கான வசதிகள்

சொகுசான டிரைவர் இருக்கை, டிரைவரின் வசதிக்கேற்ப ஸ்டீயரிங்கை எளிதாக மாற்றிக் கொள்ளும் டில்ட் மற்றும் டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங் அமைப்பு, ஆட்டோமேட்டட் மேனுவல் கியர் பாக்ஸ், முன்புற, பின்புறத்திற்கான கேமராக்கள் போன்றவை இந்த பஸ்சை டிரைவர் எளிதாகவும், பாதுகாப்பாகவும் இயக்க வழிவகை செய்யும்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய பஸ்சில் அசோக் லேலண்டின் எச் வரிசையிலான 6 சிலிண்டர் சிஎன்ஜி எம்பிஎஃப்ஐ எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது பாரத் ஸ்டேஜ்- 4 மாசுக்கட்டுப்பாட்டு அம்சம் கொண்டது. அதிகபட்சமாக 235 எச்பி பவரையும், 720 என்எம் டார்க்கையும் அளிக்கும். 6 ஸ்பீடு சின்க்ரோமெஷ் லீமாட்டிக் ஆட்டோமேட்டட் டிரான்ஸ்மிஷன் கொண்டது. இது முன்புற எஞ்சின் கொண்ட மாடல் என்பதால் அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும் என அசோக் லேலண்ட் தெரிவிக்கிறது.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

ஆன்டி ரோல் பார்கள் கொண்ட முழுவதுமான ஏர் சஸ்பென்ஷன் அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹைட்ராலிக் பவர் ஸ்டீயரிங் கொடுக்கப்பட்டுள்ளது. 295/ 80R 22.5 அளவுடைய ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. கூரை மீது சிஎன்ஜி சிலிண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்புறத்தில் டிஸ்க் பிரேக்கை ஆப்ஷனலாக பெற்றுக் கொள்ளலாம்.

இருக்கை மாடல்கள்

இருக்கை மாடல்கள்

சிட்டி பஸ், ஏர்போர்ட் பஸ் என்று பல விதமான பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், இதன் இருக்கை அமைப்பை மாற்றிக் கொள்ளலாம்.சிட்டி பஸ் ஆப்ஷன் 1 மாடலில் 43 பயணிகளுக்கான இருக்கை அமைப்பும், சிட்டி ஆப்ஷன் 2 மாடலில் 43 பயணிகள் இருக்கை கொண்டதாகவும், அதேவேளை பின்புற வழி கொண்டதாகவும் இருக்கும். ஏர்போர்ட் பஸ் மாடலில் 19 இருக்கைகள் மற்றும் பெட்டிகள் வைப்பதற்கான வசதியுடன் இருக்கும். பொதுபோக்குவரத்துக்கான மாடலில் 27 இருக்கைகள் வசதி கொண்டதாக இருக்கும்.

Most Read Articles
English summary
Ashok Leyland has introduced world's first fully flat floor, front engine bus in Domestic market.
Story first published: Thursday, July 31, 2014, 13:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X